மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி மறுநாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இவ்விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் (25) திகதி பாடசாலைகளை நடாத்துமாறு சகல அதிபர்களுக்கு மத்திய மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு தீபாவளிக்கு மறுநாள் 21 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.