தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று தினங்களில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஹட்டன் பேருந்துசாலை ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளதாக ஹட்டன் பேருந்துசாலையின் உறுப்பினர் இதனை தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் தங்களுடைய சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 90 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.