இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற சண்டை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், காஸாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என அவரின் தந்தை ஹம்தன் பெயர் சூட்டியுள்ளார்.
போர் காலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவிகளுக்காக அவர்களை கௌரவிக்கும் விதமாக அந்நாட்டின் பெயரை அவர் சூட்டியுள்ளார்.