170 க்கு 168 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் பட்ஜெட் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனால், அரசாங்கம் கவிழ்வதும், நாட்டில் உடனடியாகத் தேர்தல் வருவதும் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் கிடைத்த வெற்றிக்கு, கிரீன் கட்சியின் ஆதரவும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த நான்கு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்காமல் விலகி இருந்தமையும் முக்கியக் காரணமாக அமைந்தன.
புதிய ஜனநாயகக் கட்சியைச் (NDP) சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பதைத் தவிர்த்திருந்தனர்.
இதனால், லிபரல் கட்சி அரசாங்கம் வாக்கெடுப்பில் வெற்றி பெறத் தேவையான வாக்குகளின் எண்ணிக்கை குறைவடைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.






