பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள குடிசை வீட்டுத்தொகுதிகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தினால் 1,500 வீடுகள் தீயில் எரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தீயை அணைக்க சுமார் 19 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், 05 மணிநேர போராட்டத்தின் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி 10.2 மில்லியன் மக்கள் வசிக்கும் டாக்காவில், வறுமை மற்றும் சுரண்டல் காரணமாக கிராமப்புறத்திலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து குடிசை வீடுகளில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






