EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பிரதான சந்தேக நபரை சீ.ஐ.டி யினர் விசாரணை செய்ய மன்னார் நீதிமன்றம் அனுமதி

பிரதான சந்தேக நபரை சீ.ஐ.டி யினர் விசாரணை செய்ய மன்னார் நீதிமன்றம் அனுமதி

தை 2, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் நீதி மன்றத்திற்கு முன் கடந்த வருடம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது குறித்த சந்தேக நபரை சீ.ஐ.டி யினர் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி கோரிய நிலையில் மன்னார் நீதவான் குறித்த அனுமதி வழங்கியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக சட்டத்தரணி எஸ்.டினேசன் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் நீதி மன்றத்திற்கு முன் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு B -9125 என்ற வழக்கில் முற்படுத்தப்பட்டு, குறித்த சந்தேக நபர் மன்னார் பொலிஸாரினால் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில்,

ஏற்கனவே அடம்பன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னணியில் குறித்த நபரும் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கனவே குறித்த வழக்கினை குற்ற விசாரணைப் பிரிவினர் கையாண்டு வந்தனர்.

அதனடிப்படையில் அடம்பன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் குறித்த சந்தேக நபரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முற்படுத்தப்பட்டு,ஏற்கனவே 72 மணித்தியாளங்கள் கொழும்பில் உள்ள சி.ஐ.டி அலுவலகத்தில் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உற்படுத்தினர்.

குறித்த 72 மணித்தியாலங்கள் இன்று வெள்ளிக்கிழமை (2) மதியம் 1 மணியுடன் நிறைவடையும் சந்தர்ப்பத்தில்,இன்றைய தினம் சீ.ஐ.டி யினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் முன்னிலைப்படுத்திய குற்ற விசாரணைப் பிரிவினர் (சீ.ஐ.டி ) குறித்த சந்தேக நபரை மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள இருப்பதால் குறித்த சந்தேக நபரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள மன்றில் அனுமதி கோரி இருந்தனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் பிரிவு 9 இன் கீழ் சந்தேக நபர் ஒருவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.

ஆனால் சி.ஐ.டி யினருக்கு மதியம் 1 மணிக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அனுமதி கிடைக்காத நிலையில், குறித்த அனுமதிக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட நிலையில்,குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி யிடம் இருந்து தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் சீ.ஐ.டி யினர் நகர்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில்,குறித்த சந்தேக நபரை 90 நாட்கள் சீ.ஐ.டி யினர் விசாரணை க்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

தொடர்புடைய செய்திகள்

ஹோட்டலில் வழங்கிய நூடுல்ஸில் கரப்பான்பூச்சி
அண்மைய செய்திகள்

ஹோட்டலில் வழங்கிய நூடுல்ஸில் கரப்பான்பூச்சி

தை 2, 2026
தையிட்டி விகாராதிபதி சந்தித்த மாவட்ட செயலர் ம. பிரதீபன்
இலங்கை

தையிட்டி விகாராதிபதி சந்தித்த மாவட்ட செயலர் ம. பிரதீபன்

தை 2, 2026
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!
இலங்கை

மத்துகம பிரதேச சபையின் தலைவர் கைது

தை 2, 2026
தையிட்டி விகாரைக்கு சென்ற நாகதீப விகாராதிபதி
அண்மைய செய்திகள்

தையிட்டி விகாரைக்கு சென்ற நாகதீப விகாராதிபதி

தை 2, 2026
கூமாங்குளம் கிராமசேவையாளர் அலுவலகம் திறப்பு
இலங்கை

கூமாங்குளம் கிராமசேவையாளர் அலுவலகம் திறப்பு

தை 2, 2026
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களை  பொலிஸார் பாதுகாக்க வேண்டும் – நயினாதீவு விகாராதிபதி
அண்மைய செய்திகள்

தையிட்டியில் காணிகளை இழந்தவர்களை பொலிஸார் பாதுகாக்க வேண்டும் – நயினாதீவு விகாராதிபதி

தை 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

ஹோட்டலில் வழங்கிய நூடுல்ஸில் கரப்பான்பூச்சி

ஹோட்டலில் வழங்கிய நூடுல்ஸில் கரப்பான்பூச்சி

10 மணத்தியாலங்கள் முன்னர்
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது!

கொள்ளுப்பிட்டியில் 10 வெளிநாட்டவர்கள் கைது

5 நாட்கள் முன்னர்
பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள் – வவுனியாவில் போராட்டம்

பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள் – வவுனியாவில் போராட்டம்

4 நாட்கள் முன்னர்
இலங்கை மக்களுக்கு முதலில் கரம் கொடுத்த நாடு இந்தியா – செல்வம் அடைக்கலநாதன்

இலங்கை மக்களுக்கு முதலில் கரம் கொடுத்த நாடு இந்தியா – செல்வம் அடைக்கலநாதன்

2 நாட்கள் முன்னர்
சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In