யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட உணவொன்றில் கரப்பான் பூச்சியிருந்துள்ள விடயம் தற்போது பேசுப் பொருளாகியுள்ளது.
நேற்றையதினம் குறித்த ஹோட்டலுக்கு ஒரு குடும்பத்தினர் சென்றிருந்த நிலையில் அங்கு வழங்கப்பட்ட நூடுல்ஸில் கரப்பான்பூச்சி இருந்துள்ளது.
இது தொடர்பில் ஹோட்டல் பணியாளர்களுக்கு எடுத்துக் கூறியபோது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.











