மலையாள திரையுலகின் முன்னணி சூப்பர் ஸ்டார் மோகன்லால், தேசிய விருது பெற்ற ‘மெப்படியான்’ பட புகழ்பெற்ற இயக்குநர் விஷ்ணு மோகனுடன் முதல்முறையாக கைகோர்க்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘ஆபரேஷன் கங்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
வெளியாகியுள்ள அந்தப் பிரம்மாண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அடர்ந்த மேகங்களுக்கு நடுவே ஒரு நகரத்தின் மீது கையில் வாள் மற்றும் கேடயத்துடன் கம்பீரமாக நிற்கும் பெண் சிலை இடம்பெற்றுள்ளது.
அச்சிலைக்கு அருகில் போர் விமானம் ஒன்று பறந்து செல்வது போன்றும், ‘ஒரு தேசத்தின் வாக்குறுதி’ என்ற துணைத் தலைப்புடன் அமைந்த வடிவமைப்பு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து அர்ஜுன் ராம்பால், பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாஸ்வத் சச்தேவ் இசையமைக்கவுள்ளார்.











