கியூபெக் மாகாணத்தில் டெர்ரபோன் பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவின் எண்ணிக்கை முடிவுகளே இறுதியானவை என்று கனடா தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு அஞ்சல் பிழை காரணமாக ஒரு சிறப்பு வாக்குச் சீட்டு வாக்காளருக்கு திருப்பி அனுப்பப்பட்ட போதிலும் இந்த முடிவு உறுதியானது என, அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தத் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் லிபரல் கட்சி வெற்றி பெற்றது.
எனினும், தபால் மூலம் அனுப்பப்பட்ட ஒரு வாக்குச் சீட்டில் சிக்கல் ஏற்பட்டது.
பிளாக் கியூபெகுவா கட்சிக்கான வாக்காளர் ஒருவர் தனது வாக்குச் சீட்டு ஆனது, முகவரிப் பிழை காரணமாக திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறினார்.
அந்த தவறு உறுதியான போதிலும், மறு வாக்கு எண்ணிக்கை முடிவு இறுதியானது என்று கனடா தேர்தல்கள் திணைக்களம் கூறுகிறது.





