கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியதாக மேலும் ஒரு பெண் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு 13, பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபர், பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் பாலச்சந்திரன் புஷ்பராஜின் நண்பர் என்றும், அவர் “புகுடு கண்ணா” என்றும் அழைக்கப்படுகிறார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.





