சிவனொளிபாத யாத்திரை காலத்துடன் இணைந்த வகையில், சிவனொளிபாத தளத்தின் சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதையும், யாத்திரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டம், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பமானது.
அதன்படி, இந்த ஆண்டு சிவனொளிபாத யாத்திரை காலம் தொடங்குவதற்கு முன்பு, சிவனொளிபாத மலையின் புனிதப்பிரதேசம் உட்பட செல்வதற்கு கடினமான பகுதிகளில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றி, குறித்த சூழல் கட்டமைப்பை பொலித்தீன் மற்றும் ப்ளாஸ்டிக் மூலம் மீண்டும் மாசடைவதைத் தடுக்கவும் கூட்டு வேலைத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இலங்கை இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையின் தலைமையிலான இந்த “சிறப்பு நடவடிக்கை” நவம்பர் 29 வரை நடைபெறும்.





