மூன்று நாள் தொடர் காய்ச்சலினால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
யாழ்ப்பாணம், அல்வாய் கிழக்கை சேர்ந்த பிரதீபன் லக்சுதன் (வயது 17) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.
மூன்று நாள் தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனை , தாயார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





