மன்னார் நகர் மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சில கிராமங்களில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துக் காணப்படுகின்றது-கட்டுப்படுத்த துரித நடவடிக்கை-அரச அதிபர்
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
(23-08-2024)
மன்னார் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மற்றும் மக்கள் வேறு இடங்களுக்கு சென்று வருகின்ற மையினால் கடந்த காலங்களை விட இம்முறை மன்னார் மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரித்த நிலையில் காணப்படுவதாகவும், மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகிற நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.





