EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி யாழில் போராட்டம்

கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி யாழில் போராட்டம்

மாசி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்சே நீதிமன்றில் முன்னிலையாவதை தவிர்த்து, அவர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் . நீதவான் நீதிமன்றில் லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணமால் ஆக்கப்பட்டுள்ள நிலைமையில் அவர்கள் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கு விசாரணைக்காக யாழ் . நீதவான் நீதிமன்றில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்சே முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்காக யாழ்ப்பாணம் வருகை தருவதற்கு தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து , இணைய வழியில் சாட்சியம் அளிக்க தயார் என மன்றுக்கு கோட்டாபய ராஜபக்சே சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் காலங்களிலும் , அதன் பின்னர் ஜனாதிபதியான பின்னரும் யாழ்ப்பாணம் வந்து சென்ற நிலையில் , வழக்கு விசாரணைக்காக வருவதை தவிர்ப்பதனை வழக்கு தொடுநர் தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் சுட்டிக்காட்டி இருந்தனர்.

அதனால், மன்று கோட்டாபய ராஜபக்சேவிற்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் சத்திய கடதாசி ஊடாக மன்றுக்கு தெரிவிக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதிலும் கோட்டபாய ராஜபக்சே மன்றில் முன்னிலையாகவில்லை.

அதனை அடுத்து இரு தரப்பு சட்டத்தரணிகளும் எழுத்து மூல சமர்ப்பனங்களை செய்யுமாறு மன்று கட்டளையிட்டு , வழக்கினை மார்ச் மாதம் 06ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது.

இந்நிலையில் , கோட்டாபய ராஜபக்சே நீதிமன்றத்தைத் தொடர்ச்சியாகப் புறக்கணிப்பதற்கு எதிராகவும் அனைத்துக் காணாமலாக்கப்படல்களுக்கும் நீதியை நிலைநாட்ட கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In