EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
நானாட்டான் டிலாசால் கல்லூரி ஆசிரியரை  இடமாற்றக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

நானாட்டான் டிலாசால் கல்லூரி ஆசிரியரை இடமாற்றக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆனி 8, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி நானாட்டான் டிலாசால் கல்லூரி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை (8) காலை பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டமானது நானாட்டான் டிலாசால் கல்லூரியில் ஊடகம் தொடர்பான கற்கை ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும், மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் பாடசாலைக்கு நியமிக்கப்பட்டதில் இருந்து ஊடகம் தொடர்பான கற்றலில் பின்னோக்கி காணப்படுவதாகவும், மாணவர்கள் ஊடக கற்றலுக்கு செல்ல மறுப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் குறித்த ஆசிரியர் பாடசாலை நிர்வாகத்திற்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் ஒத்துழைப்புகள் வழங்குவதில்லை எனவும் நிர்வாகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக குழப்பம் விளைவித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட போதும், இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் அதனால் இந்த அமைதி வழியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கலந்து கொண்ட பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு வருகை தந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய நிலையில், குறித்த ஆசிரியரின் இடமாற்றம் தொடர்பாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரால் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மகஜரை பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு இரு வாரங்களில் தீர்வை பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து வலயக்கல்வி அலுவலகம் சார்பாக வருகை தந்த அதிகாரிகளிடமும் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்ததோடு, தமது போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காது விட்டால் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

குறித்த போராட்டத்தில் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் பாரிய மண்சரிவு
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் பாரிய மண்சரிவு

ஆனி 8, 2026
அம்பலாங்கொடையில் கைதான 75 இளைஞர்கள்
அண்மைய செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது

ஆனி 8, 2026
மலையக வாழ்வியலை திரைப்படமாக எடுக்க திட்டம்
அண்மைய செய்திகள்

மலையக வாழ்வியலை திரைப்படமாக எடுக்க திட்டம்

ஆனி 8, 2026
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

ஆனி 8, 2026
யாழில்.நாளை முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்
அண்மைய செய்திகள்

யாழில்.நாளை முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

ஆனி 8, 2026
செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள  சிறுவர்களின் என்பு கூடுகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள சிறுவர்களின் என்பு கூடுகள்

ஆனி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

மலையக வாழ்வியலை திரைப்படமாக எடுக்க திட்டம்

மலையக வாழ்வியலை திரைப்படமாக எடுக்க திட்டம்

4 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுப்பு

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுப்பு

2 நாட்கள் முன்னர்
இலங்கையில் பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை – டானியல் வசந்தன்

இலங்கையில் பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை – டானியல் வசந்தன்

3 நாட்கள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

3 நாட்கள் முன்னர்
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In