வவுனியா மாநகரசபை மேயரின் பதவி நீக்கத்தை கண்டித்தும், வடக்கு ஆளுனருக்கு எதிராகவும் வவுனியா நகரப் பகுதியில் சில வர்த்தக நிலையங்கள் இன்று (29.06) காலை பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் வடக்கு ஆளுனரின் ஜனநாயக படுகொலையை கண்டித்து வர்த்தக நிலையங்களை மதியம் வரை பூட்டுமாறும், பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான கோரிக்கைகள் விடப்பட்டிருந்தன.
குறித்த கோரிக்கைக்கு அமைய வடக்கு ஆளுனரின் செயற்பாட்டை கண்டித்து வவுனியா நகரப் பகுதியில் இருந்த வர்த்தக நிலையங்களில் 50 வீதமான வர்த்தக நிலையங்கள் சுமார் 3 மணிநேரம் மூடி தமது எதிர்ப்பை வெளிபடுத்தி இருந்தனர். ஏனைய வர்த்தக நிலையங்கள் வழமை போல் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











