EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

ஆவணி 17, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பான சுற்று நிருப முறையை அமல்படுத்தக் கோரியும் சமூக ஊடகங்களில் சீருடை பற்றி இழிவுபடுத்தும் செயற்பாட்டை கண்டித்தும் இங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை (17) வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த வைத்தியசாலைக்கு சுகாதார உதவியாளர்களாக 9 முஸ்லிம் பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சீருடைக்கு மேலதிகமாக ஹிஜாப் அணிவதால் ஏற்பட்டுள்ள சர்ச்சையை சில அரசியல்வாதிகள் அரசியலாக்கி சுகாதார சுற்று நிருபத்தில் உள்ள சட்டதிட்டங்களை மீறி இடையூறுகள் இடம்பெற்று வருகிறது அதற்கு தீர்வு கோரி அங்கு கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர்.

இதனையடுத்து வைத்தியசாலைக்கு முன்னால் இன்று காலை 8.30 மணிக்கு ஒன்று கூடிய சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவான சீருடை அணிய அனுமதியுங்கள், சீருடை சம்பந்தமான சுற்றுநிருபம் அமுல்படுத்து, சீருடை இன்றி வருபவர்களை கடமைக்கு அனுமதியாதே, சமூக வலைத்தளங்களே எங்களை கொல்லாதே.

வைத்திய சாலைக்கு எதிராக அவதூறுகளை பரப்பாதீர்கள், இதுவரை காலமும் இல்லாத சீருடை புதிதாக சீருடையை அமைக்க வேண்டாம், நிர்வாகமே இதற்கான தீர்வை பெற்றுத் தாருங்கள் போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 30 நிமிடம் ஈடுபட்ட பின்னர் கலைந்து சென்றனர்.

அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த சுகாதார சேவை புனிதமானது இன மத பேதம் இன்றி சேவை செய்து வருகிறார் சுகாதார திணைக்களத்தின் சீருடை தொடர்பான சுற்று நிருபத்துக்கு அமைய நாங்கள் சீடையணிந்து சேவை செய்து வருகிறோம். அதேவேளை சீருடை தொடர்பான சுற்று நிருபத்துக்கு அமைய எமது வைத்தியசாலை நிர்வாகம் அதனை கட்டாயமாக்கியுள்ளது.

இந்த நிலையில் புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண்கள் அந்த சுற்றுநிருபத்தை ஏற்று நியமனத்தை பெற்றுக் கொண்டனர் இருந்தபோதும் சுற்று நிருபத்திலுள்ள ஆடை அணிய முடியாது என தெரிவித்து வருகின்றனர்.

இது இந்த வைத்தியசாலை கட்டமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைக்காக இந்த சுகாதார ஊழியர்களின் செயல்பாடு எங்களுக்கு நடந்து கொண்டு இருக்கின்றது எனவே இந்த சீருடை தொடர்பான தீர்வை முழுமையாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது

ஆவணி 18, 2026
புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
அண்மைய செய்திகள்

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

ஆவணி 18, 2026
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்
அண்மைய செய்திகள்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

ஆவணி 18, 2026
செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள்

ஆவணி 18, 2026
யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்
அண்மைய செய்திகள்

யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்

ஆவணி 18, 2026
பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள  வழக்கு
அண்மைய செய்திகள்

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

ஆவணி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கைதான ஸ்பெயின் பிரஜை

போதைப்பொருள் வழக்கில் இலஞ்சம் பெற்ற 04 பொலிஸார்

1 நாள் முன்னர்
யாழில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்

யாழில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்

1 நாள் முன்னர்
யாழில் இடம்பெற்ற உணவுத் திருவிழா!

யாழில் இடம்பெற்ற உணவுத் திருவிழா!

1 நாள் முன்னர்
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

5 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In