EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

ஆவணி 22, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

14 வயதே நிரம்பிய தன்னுடைய சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று (21) தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வவுனியாவில் இக்குற்றச்செயல் இடம்பெற்ற போது பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது 14 ஆகும்.

இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.

எதிரி மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு தீர்ப்பு நேற்றைய தினம் (21) வழங்கப்பட்டது.

சம்பவம் இடம்பெற்ற காலத்தில் குறித்த சிறுமியின் தாயும் தந்தையும் பிரிந்திருந்ததையடுத்து சிறுமி தந்தையின் பாதுகாப்பிலே வசித்து வந்துள்ளார். குற்றச்செயல் நடந்த சந்தர்ப்பத்தில் சிறுமிக்கு வெறுமனே இரண்டரை வருடங்கள் நிரம்பிய தங்கையும் இருந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று தந்தை மதுபானம் அருந்தி விட்டு வீட்டிலே வைத்து குறித்த குற்றச்செயலைப் புரிந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, சொந்தத் தந்தையாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள், மேலும் இனி வரும் காலங்களில் இப்படியானதொரு குற்றச்செயல் நடைபெறாமல் தடுக்கும் நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றம் கருத்தில் கொண்டு கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,000,000 ரூபா (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் செலுத்தத் தவறின் மேலதிகமாக 2 வருடங்கள் சிறைத்தண்டனயும் வழங்கி தீர்பளித்திருந்தார்.

தீர்ப்பும் தண்டனையும் குறித்த சிறுமியின் நலன்களை பாதுகாக்கும் முகமாகவும், சமூகத்தில் ஒரு பாரதூரமான குற்றச்செயல் இடம்பெறின் நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையை வழங்கும் என்ற எண்ணப்பாட்டை விதைக்கும் முகமாகவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நல்லூர் ஆலயத்திற்கு சென்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன
அண்மைய செய்திகள்

நல்லூர் ஆலயத்திற்கு சென்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன

ஆவணி 22, 2026
யாழிற்கு வருகை தந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

யாழிற்கு வருகை தந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஆவணி 22, 2026
நா.உ.பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸில் முறைப்பாடு
அண்மைய செய்திகள்

நா.உ.பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸில் முறைப்பாடு

ஆவணி 22, 2026
நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை
அண்மைய செய்திகள்

நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

ஆவணி 22, 2026
நெடுந்தீவு குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கும் கடற்படையினர்
அண்மைய செய்திகள்

நெடுந்தீவு குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கும் கடற்படையினர்

ஆவணி 22, 2026
யாழில் கண்பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்
அண்மைய செய்திகள்

யாழில் கண்பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்

ஆவணி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள  வழக்கு

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

4 நாட்கள் முன்னர்
யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

3 நாட்கள் முன்னர்
நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு

1 நாள் முன்னர்
புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

4 நாட்கள் முன்னர்
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In