EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மட்டு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தூபியை பொலிசார் புனரமைக்க விடாது தடுத்து நிறுத்தம்.

மட்டு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தூபியை பொலிசார் புனரமைக்க விடாது தடுத்து நிறுத்தம்.

புரட்டாதி 9, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை செய்யப்படவர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியை புனர்நிர்மானம் செய்து அதில் இராணுவத்தினால் படுகொலை செய்யப்படவர்கள் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இன்று திங்கட்கிழமை (09) பதித்தனர். இதனை பொலிசார் பலவந்தமாக கழற்றி எடுத்து அங்கு புனரமைப்பு செய்யவிடாது தடுத்ததையடுத்து பொதுமக்களுக்கும் பொலிசாருக்குமிடையே பெரும் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து பதற்றம் ஏற்பட்டதுடன் பொலிசார் குவிக்கப்பட்டு சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

1990 ம் ஆண்டு செட்டெம்பர் 9 ம் திகதி கொக்குவில், பனிச்சையடி பிள்ளையாரடி, சத்துருக் கொண்டான் உட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள்,10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 42 பேரும் 25 வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி பொதுமக்களை இராணுவத்தினராலும் ஊர்காவல் படையினராலும், ஒட்டுக்குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டவர்களின் 34 வது நினைவேந்தல் இன்றையதினமாகும் அதனை முன்னிட்டு சத்துருக் கொண்டானில் அமைக்கப்பட்ட படுகொலை செய்யப்பட்டவர்களின் தூபியில் நினைவேந்தல் செய்வதற்காக படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்.

இதில் 1990 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 186 அப்பாவி பொதுமக்கள் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டை நினைவு தூபியில் பதித்துக் கொண்டிருந்தனர் இதன் போது அங்கு சென்ற கொக்குவில் பொலிசார் இராணுவத்தினராலும் முஸ்லீம் ஊர்காவல் படையினர் ஒட்டுக்குழுக்களால்; படுகொலை செய்யப்பட்ட பகல்லெட்டை பதிக்க முடியாது என வேலை செய்யவிடாது தடுத்தனர். இதன் போது அங்கிருந்த பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே பெரும் வாய்தர்கம் ஏற்பட்டது.

இதன் போது பொதுமக்கள் இது 1995 சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது ஓய்வு பெற்ற நீதியரசர் கே.பாலிகிட்ணன் தலைமையில் ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதில் பாதிக்கப்பட்ட மக்களும் அதில் உயிர் தப்பியவர்கள் பலர் இராணுவத்தினர் ஊர்காவல் படையினர் படுகொலை செய்தாக சாட்சியமளித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் யாரால் படுகொலை நடந்தது என பெயர் பொறிக்க கல்வெட்டை பொறிக்க கூடாது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வாதத்தில் ஈடுபட்ட நிலையில் தொடர்ந்தும் கல்வெட்டை பதிக்க விடாது பொலிசார் தடுக்க முற்பட்டபோது அதனை மீறி கல்வெட்டு பதிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது அங்கு பொலிஸ் அத்தியட்சகர் பொதுமக்கள் மற்றும் சமூகசெயற்பாட்டாளர்கள் உட்பட 7 பேரை அங்கிருந்து இழுத்துச் சென்று ஜீப்வண்டியில் ஏற்றியதுடன் வேலை செய்து கொண்டிருந்த மேசனை இழுத்து எடுத்து அவரை கொண்டு பதித்த கல்வெட்டை கழற்றி அராஜகத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஜீப்வண்டியில் இழுத்து ஏற்றப்பட்ட 7 பேரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்த பின்னர் அவர்களை அங்கு இறக்கி விட்டனர். அதேவேளை அங்கு பொலிசார் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுத்துவருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In