EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக் தேர்தல் – பெரும்பான்மையின்றி ஆட்சி அமையும் சாத்தியம்!

கியூபெக் தேர்தல் – பெரும்பான்மையின்றி ஆட்சி அமையும் சாத்தியம்!

புரட்டாதி 22, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காமல், சிறுபான்மை அரசு (Minority Government) அமையக்கூடும் எனத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய களநிலவரப்படி, ஐந்து முனைப் போட்டி நிலவும் சூழலில் பார்ட்டி கியூபெக்கோயிஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. வெளியாகியுள்ள புதிய தேர்தல் ஆய்வுகளின்படி, தற்போதைய ஆளும்கட்சியான கொஅலிஷன் அவனீர் கியூபெக் கட்சி 22.1 சதவீத மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது.

கியூபெக் லிபரல் கட்சி 21.5 சதவீத ஆதரவுடன் கடும் போட்டியை வழங்கி வருகிறது. கன்சர்வேட்டிவ் கட்சி 16.1 சதவீத மக்களின் ஆதரவையும் கியூபெக் சொலிடேர் கட்சி 10.3 சதவீத மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. முக்கிய கட்சிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருப்பதால், பொதுவாக்குகளை விட, கியூபெக் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையே ஆட்சியை யார் அமைப்பது என்பதைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

பார்ட்டி கியூபெக்கோயிஸ் கட்சித் தலைவர் போல் சென்-பியர் பிளாமொண்டன் (Paul St-Pierre Plamondon), கியூபெக் மாகாணத்தின் தனித்துவமான இறையாண்மை மற்றும் சுதந்திரம் குறித்த தனி வாக்கெடுப்பை (Referendum) நடத்தும் வாக்குறுதியுடன் பிரசாரத்தை
முன்னெடுத்து வருகிறார். இந்த வாக்கெடுப்பை நடத்துவதற்குச் சுமார் 130 மில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதுவே தற்போது இத்தேர்தலின் பிரதான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அதேவேளையில், கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine  Fréchette) தலைமையிலான ஆளும்கட்சியான CAQ, தனது செல்வாக்கை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டமாக தலைவர்களுக்கு இடையிலான நேரடி விவாதங்கள் நடைபெறவுள்ளதால், வாக்காளர்களின் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்களை அவமதித்தால் 2,000 டொலர் அபராதம்!
கியூபெக்

பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்களை அவமதித்தால் 2,000 டொலர் அபராதம்!

புரட்டாதி 22, 2026
சவுத் ஷோர் போக்குவரத்து நெருக்கடி – மாகாண அரசுக்கு மேயர்கள் கோரிக்கை!
கியூபெக்

சவுத் ஷோர் போக்குவரத்து நெருக்கடி – மாகாண அரசுக்கு மேயர்கள் கோரிக்கை!

புரட்டாதி 22, 2026
மொன்றியலில் 6,600 தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ரத்து
கியூபெக்

மொன்றியலில் 6,600 தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ரத்து

புரட்டாதி 22, 2026
கியூபெக்கில் நேர மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி – CAQ அதிரடி அறிவிப்பு
கியூபெக்

கியூபெக்கில் நேர மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி – CAQ அதிரடி அறிவிப்பு

புரட்டாதி 22, 2026
மொன்றியல் மாநகரசபையின் ஒப்பந்த விதிகளை மீறிச் செயற்பட்டுள்ள நிறுவனம்
கியூபெக்

மொன்றியல் மாநகரசபையின் ஒப்பந்த விதிகளை மீறிச் செயற்பட்டுள்ள நிறுவனம்

புரட்டாதி 22, 2026
இன்று மொன்றியலில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வீதிகள்!
கியூபெக்

இன்று மொன்றியலில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வீதிகள்!

புரட்டாதி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி

முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி

4 மணத்தியாலங்கள் முன்னர்
கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு

கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு

3 நாட்கள் முன்னர்
வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் பணி ஆரம்பம்!

வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் பணி ஆரம்பம்!

3 நாட்கள் முன்னர்
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

யாழில் பொலிஸார் மறித்த இளைஞன் மரணம்

3 நாட்கள் முன்னர்
இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In