EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்களை அவமதித்தால் 2,000 டொலர் அபராதம்!

பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்களை அவமதித்தால் 2,000 டொலர் அபராதம்!

புரட்டாதி 22, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter
மொன்றியல் நகரப் பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்களை அச்சுறுத்துதல், துன்புறுத்துதல் அல்லது அவமதிக்கும் வகையில் பேசுவோருக்கு 2,000 கனடிய டொலர் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டமூலம் குறித்து மொன்றியல் மாநகரசபை (Montreal City Council) ஆராயவுள்ளது.

மொன்றியல் மேயர் சொராயா மார்ட்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இச்சட்டமூலத்திற்கு மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவிட்டு வருகின்றனர்.

நகரமன்றக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இச்சட்டமூலத்தின்படி, கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மாநகரசபை ஊழியர்களை அச்சுறுத்துதல், துன்புறுத்துதல், அவமதித்தல், வாய்மொழி வசைபாடுதல் அல்லது அநாகரீகமாக நடந்துகொள்ளுதல் குற்றம் எனக் கருதப்படும்.

இக்குற்றச்சாட்டில் முதன்முறையாகச் சூட்டப்படுபவர்களுக்கு 350 டொலர் முதல் 1,000 டொலர் வரையிலும், இரண்டாவது முறை குற்றமிழைத்தால் இரட்டிப்பாக 2,000 டொலர் வரையிலும் அபராதம் விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

2019 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், மாநகரசபை ஊழியர்களுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்கள் மற்றும் அவமரியாதையான நடத்தைகள் 250 சதவீதத்திற்கும் அதிகமாகஅதிகரித்துள்ளதாக மொன்றியல் மாநகரசபை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, கடந்த 2025 ஜூன் மாதம் வாகனச் சோதனையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை பெண் வெறுப்புச் சொற்களால் திட்டி, அதை காணொளியாகப் பதிவு செய்து ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இத்தகைய சம்பவங்களில் இருந்து ஊழியர்களைப் பாதுகாக்கவும், நாகரீகமான சூழலை உருவாக்கவுமே இச்சட்டம் கொண்டுவரப்படுவதாக
மாநகரசபை தெரிவிக்கிறது.

இதேவேளை, கனடிய சிவில் உரிமைகள் சங்கம் (CCLA) மற்றும் லிக் டெஸ் டிரோய்ட்ஸ் எட் டெஸ் லிபெர்ட்டெஸ் (Ligue des droits et libertés) ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சட்டமூலம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளன. அச்சுறுத்தலாக இல்லாத, சாதாரணக் கருத்துக்களைக் கூட அவமதிப்பு எனக் கூறி பொலிஸார் அபராதம் விதிக்க அதிகாரம் அளிப்பது, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான அதிகார ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கும் என கனடிய சிவில் உரிமைகள் சங்கத்தின் கியூபெக் பிரதிநிதி அனாய்ஸ் புஸியரெஸ் மெக்நிகோல் (Anaïs Bussières McNicoll) தெரிவித்துள்ளார்.

மேலும், இது கறுப்பின, பழங்குடியின மற்றும் அரபுச் சமூகங்களைச் சேர்ந்த மக்களை பொலிஸார் இலக்கு வைக்கும் இனரீதியான வகைப்படுத்தல் (Racial profiling) நடவடிக்கைகளுக்கே வழிவகுக்கும் என்றும் சிவில் உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சவுத் ஷோர் போக்குவரத்து நெருக்கடி – மாகாண அரசுக்கு மேயர்கள் கோரிக்கை!
கியூபெக்

சவுத் ஷோர் போக்குவரத்து நெருக்கடி – மாகாண அரசுக்கு மேயர்கள் கோரிக்கை!

புரட்டாதி 22, 2026
கியூபெக் தேர்தல் – பெரும்பான்மையின்றி ஆட்சி அமையும் சாத்தியம்!
கியூபெக்

கியூபெக் தேர்தல் – பெரும்பான்மையின்றி ஆட்சி அமையும் சாத்தியம்!

புரட்டாதி 22, 2026
மொன்றியலில் 6,600 தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ரத்து
கியூபெக்

மொன்றியலில் 6,600 தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ரத்து

புரட்டாதி 22, 2026
கியூபெக்கில் நேர மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி – CAQ அதிரடி அறிவிப்பு
கியூபெக்

கியூபெக்கில் நேர மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி – CAQ அதிரடி அறிவிப்பு

புரட்டாதி 22, 2026
மொன்றியல் மாநகரசபையின் ஒப்பந்த விதிகளை மீறிச் செயற்பட்டுள்ள நிறுவனம்
கியூபெக்

மொன்றியல் மாநகரசபையின் ஒப்பந்த விதிகளை மீறிச் செயற்பட்டுள்ள நிறுவனம்

புரட்டாதி 22, 2026
இன்று மொன்றியலில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வீதிகள்!
கியூபெக்

இன்று மொன்றியலில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வீதிகள்!

புரட்டாதி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

4 மணத்தியாலங்கள் முன்னர்
தியாக தீபத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

தியாக தீபத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

3 நாட்கள் முன்னர்
யாழில் பிரபல வெதுப்பகத்தின் கிளைக்கு சீல் வைப்பு

யாழில் பிரபல வெதுப்பகத்தின் கிளைக்கு சீல் வைப்பு

3 மணத்தியாலங்கள் முன்னர்
வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

2 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் எட்டாம் நாள் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபத்தின் எட்டாம் நாள் நிகழ்வு

5 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In