EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சங்கர்

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சங்கர்

ஐப்பசி 1, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தை இயக்குநர் சங்கர் பாராட்டியுள்ளார்.

சீதக்காதி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களைத் தொடர்ந்து பாலாஜி தரணீதரன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் குறித்து சமூக வலைதளப் பதிவொன்றை இயக்குநர் சங்கர் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘பத்தா’ திரைப்படம் நல்ல கதை, மனிதநேயம், சிறந்த நகைச்சுவை மற்றும் படம் முழுவதும் கைதட்டல் பெறத் தகுதியான தருணங்களைக் கொண்ட ஒரு அழகான திரைப்படம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மிகச் சிறந்த நடிகர்தேர்வு மற்றும் நடிப்புடன், ஒவ்வொரு முகத்தின் ‘க்ளோஸ்-அப்’ காட்சிகளும் மிக அருமையாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

படத்தில் விஜய் சேதுபதி மிகச்சிறந்த மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சங்கர், படத்தில் நடித்துள்ள சிறுவன் சாய் பிரித்விராஜ் தேசிய விருது பெறத் தகுதியானவன் என்றும் பாராட்டியுள்ளார்.

கதாநாயகியாக நடித்துள்ள லிஜோமோல் ஜோஸ் மிகவும் இயல்பாகவும் நேர்த்தியாகவும் நடித்துள்ளதாகவும், சாய் அபயங்கரின் பின்னணி இசை காட்சிகளை வேறொரு உயரத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அப்பாவித்தனமும் உணர்ச்சிகளும் நிறைந்த பல நெகிழ்ச்சியான தருணங்கள் படத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இத்தகைய தரமான வெற்றிப் படத்தை தயாரித்ததற்காக தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது பாலாஜி தரணீதரனிடமிருந்து மற்றொரு மறக்க முடியாத திரைப்படம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ், குழந்தை நட்சத்திரம் சாய் பிரிதிவ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஸ்டார் ஸ்டுடியோ 18 மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

‘டோரதி’ திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு!
சினிமா

‘டோரதி’ திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு!

ஐப்பசி 1, 2026
‘கோல்டன் பாக்கியம்’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!
சினிமா

‘கோல்டன் பாக்கியம்’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!

புரட்டாதி 30, 2026
நாகர்ஜுனாவிற்கு  வில்லனாக மாறும் அசோக் செல்வன்
சினிமா

நாகர்ஜுனாவிற்கு வில்லனாக மாறும் அசோக் செல்வன்

புரட்டாதி 30, 2026
மீண்டும் இணையும் ஆர். பால்கி மற்றும் வித்யா பாலன்
சினிமா

மீண்டும் இணையும் ஆர். பால்கி மற்றும் வித்யா பாலன்

புரட்டாதி 29, 2026
மீசைய முறுக்கு 2 – வசூலில் கவனம்
சினிமா

மீசைய முறுக்கு 2 – வசூலில் கவனம்

புரட்டாதி 29, 2026
Love படத்தின் Break Free பாடல் வெளியானது!
சினிமா

Love படத்தின் Break Free பாடல் வெளியானது!

புரட்டாதி 28, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

5 நாட்கள் முன்னர்
நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

ஒரு இலட்சத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்

3 நாட்கள் முன்னர்
கரைச்சியில் அனோஜனின்  விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்

கரைச்சியில் அனோஜனின் விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்

6 நாட்கள் முன்னர்
தலைமன்னாரின் 3 வது மணல் திட்டை நோக்கி ஆரம்பமான படகு சேவை

தலைமன்னாரின் 3 வது மணல் திட்டை நோக்கி ஆரம்பமான படகு சேவை

6 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check