EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தலைமன்னாரின் 3 வது மணல் திட்டை நோக்கி ஆரம்பமான படகு சேவை

தலைமன்னாரின் 3 வது மணல் திட்டை நோக்கி ஆரம்பமான படகு சேவை

புரட்டாதி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

உலக சுற்றுலா தின விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தில் முக்கியமான ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) காலை வெள்ளோட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் கலந்து கொண்டார்.

மேலும் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் நகர பிரதேசச் செயலாளர் காந்தீபன் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டதோடு, பொலிஸார் மற்றும் கடற்படையினரும் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னாரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தலைமன்னார் கடற்கரையிலிருந்து 3 வது மணல் திட்டை நோக்கி குறித்த வெள்ளோட்ட ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ,மன்னார் நகர பிரதேச செயலாளர் காந்தீபன் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.

காலை 9 மணியளவில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து விசேட படகுகள் மூலம் 3 வது மணல் திட்டை நோக்கி பயணம் இடம் பெற்றது.இரண்டாவது மணல் திட்டில் கடற் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் களைப்பறுவதற்கும், அதில் அவர்கள் தங்களுடைய செயல்பாடுகளைச் செய்வதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது மணல் திட்டு, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும், சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்ற பொழுது அவர்களை இங்கு கூட்டிக்கொண்டு வந்து, இந்த இடத்தில் ஆய்வுகளைச் செய்துவிட்டு, அவர்கள் திரும்பிச் செல்லக்கூடிய ஒரு நடை முறை முன்னெடுக்கப்பட்டது.

வட மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்து தலைமன்னாரில் இருந்து விசேட படகுகள் மூலம் கட்டணம் செலுத்தி மூன்றாவது மணல் காட்டிற்குச் சென்று பார்வையிடுவதற்கான வசதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த நடவடிக்கைகள் மூலம் தலைமன்னாரில் இருக்கின்ற சுய தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு, தங்களுடைய வருமானத்தைப் பெருக்க கூடிய வகையில் தொழில் வாய்ப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறித்த மணல் திட்டை பார்வையிம் தினம் தொடர்பாக ஏற்பாட்டு குழுவினரால் அறிவித்தல் விடுக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு
அண்மைய செய்திகள்

மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

புரட்டாதி 25, 2026
பெரும்பான்மை வாக்குகளோடு 22வது திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்
இலங்கை

பெரும்பான்மை வாக்குகளோடு 22வது திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு
அண்மைய செய்திகள்

நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட பேரணி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட பேரணி

புரட்டாதி 25, 2026
மயிலிட்டியில் தொடரும் போராட்டம்
இலங்கை

மயிலிட்டியில் தொடரும் போராட்டம்

புரட்டாதி 25, 2026
கரைச்சியில் அனோஜனின்  விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கரைச்சியில் அனோஜனின் விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்

புரட்டாதி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

3 நாட்கள் முன்னர்
கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு நேரில் சென்ற வடக்கு ஆளுநர் தலைமையிலான குழு

கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு நேரில் சென்ற வடக்கு ஆளுநர் தலைமையிலான குழு

1 நாள் முன்னர்
யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

5 நாட்கள் முன்னர்
கரைச்சியில் அனோஜனின்  விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்

கரைச்சியில் அனோஜனின் விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்

8 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன்  பலி

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check