இந்தக் கணக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. நகரில் வீடின்றி வாழும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக சுமார் 250 பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் இதில் ஈடுபடவிருந்தனர்.
ஆனால், பாதுகாப்பு காரணங்களால் நேரடி கணக்கெடுப்பை ரத்து செய்வதாக Saskatoon நகர நிர்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சாத்தியமான போராட்ட நடவடிக்கைகள் காரணமாக தன்னார்வலர்கள், நகர ஊழியர்கள் மற்றும் கணக்கெடுப்பில் பங்கேற்கும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் கூறியுள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்த பாதுகாப்பு தொடர்பான கவலைகள் மேலும் அதிகரித்துள்ளதாகவும் Saskatoon நகரம் தெரிவித்துள்ளது.











