EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு

மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு

ஐப்பசி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

“அழகான வாழ்க்கையை உருவாக்க வந்த அரசாங்கம், மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கியுள்ளது” என மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடற்றொழில் இணையங்களின் ஊடகப் பேச்சாளர் அ. அன்னராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் ஆகியோருடன் இணைந்து நடைபெற்ற இந்த ஊடகச் சந்திப்பில், வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்திய இழுவைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து கடல் வளங்களைச் சேதப்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய வசந்த முதலிகே, இந்த விவகாரத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

டொலர்களைத் தேடுவதாகக் கூறும் அரசாங்கம், இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் வளங்களைக் கொள்ளையடிப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில் மௌனமாக இருப்பதாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசாங்கம் அடிபணிந்து செயற்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், நயினாதீவில் மீன்பிடிப் படகுகளை நிறுத்துவதற்குப் போதிய துறைமுக வசதிகள் இல்லாமை, காரைநகர் கடல் முகத்துவாரத்தில் மணல் நிரம்பிக் காணப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நீடிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

நாடு சுபீட்சத்தை நோக்கிப் பயணிப்பதாகக் கூறப்படும் நிலையில், அந்தச் சுபீட்சம் யாருக்கானது என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். எரிபொருள் விலை உயர்வு மற்றும் மீன்பிடி வலைகளின் தரம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாகவும் மீனவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பல தடவைகள் அதிகாரிகளிடம் முறைப்பாடுகளை முன்வைத்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனக் கடற்றொழில் இணையங்களின் ஊடகப் பேச்சாளர் அ. அன்னராசா தெரிவித்தார்.

முன்னாள் கடற்றொழில் அமைச்சரிடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும், தற்போதைய கடற்றொழில் அமைச்சரும் பாரபட்சமாகச் செயற்படுவதாகத் தாங்கள் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அ. அன்னராசா, அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தொடர்ச்சியாகப் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக எச்சரித்தார்.

மேலும், தென்னிலங்கை மீனவர்கள் மற்றும் அங்குள்ள பிரதிநிதிகளுடன் இணைந்து தென்னிலங்கையிலும் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐப்பசி 21, 2026
கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஐப்பசி 21, 2026
ஹல்துமுல்லையில் விநியோகிக்கப்படாமல் குவிக்கப்பட்டிருந்த 2,080 தபால் கடிதங்கள் மீட்பு
இலங்கை

ஹல்துமுல்லையில் விநியோகிக்கப்படாமல் குவிக்கப்பட்டிருந்த 2,080 தபால் கடிதங்கள் மீட்பு

ஐப்பசி 21, 2026
புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம் – தவிசாளர் பா.பாலேந்திரன்
அண்மைய செய்திகள்

புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம் – தவிசாளர் பா.பாலேந்திரன்

ஐப்பசி 21, 2026
கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு
அண்மைய செய்திகள்

கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

ஐப்பசி 21, 2026
பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்
அண்மைய செய்திகள்

பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்

ஐப்பசி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் 15 பேருக்கு வீட்டுத்திட்டத்திற்கான காசோலை வழங்கி வைப்பு

கிளிநொச்சியில் 15 பேருக்கு வீட்டுத்திட்டத்திற்கான காசோலை வழங்கி வைப்பு

9 மணத்தியாலங்கள் முன்னர்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

8 மணத்தியாலங்கள் முன்னர்
கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

9 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பு – அமைச்சர் சந்திரசேகர்

யாழில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பு – அமைச்சர் சந்திரசேகர்

3 நாட்கள் முன்னர்
மன்னார் ASKO கராத்தே கழகம் சர்வதேசப் போட்டியில் சாதனை!

மன்னார் ASKO கராத்தே கழகம் சர்வதேசப் போட்டியில் சாதனை!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check