EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
டம்பளர் ரிட்ஜ் பாடசாலை படுகொலை – அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு

டம்பளர் ரிட்ஜ் பாடசாலை படுகொலை – அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு

ஐப்பசி 7, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பிரிட்டீஷ் கொலம்பியாவிலுள்ள டம்பளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரப் பாடசாலையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் கொலையாளிக்கு ஆலோசனைகளும் நிதி உதவியும் வழங்கியதாக, அமெரிக்காவில் வசிக்கும் ஜேம்ஸ் கோடி பிரையன்ட் (James Cody Bryant) மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வோஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான இந்த சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் பிரிட்டீஷ் கொலம்பியாவிலுள்ள டம்பளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பாடசாலையில் இடம்பெற்ற இத்தாக்குதலில், 18 வயதான ஜெஸ்ஸி வான் ரூட்செலார் (Jesse Van Rootselaar) என்ற பெண் ஐந்து மாணவர்களையும் ஒரு கல்வி உதவியாளரையும் சுட்டுக்கொன்றார்.

பின்னர் அந்தக் கொலையாளி தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பாடசாலையில் இந்தக் குற்றச்செயலை மேற்கொள்வதற்கு முன்பாக, அவர் தன் தாயையும் சகோதரனையும் வீட்டில் வைத்துச் சுட்டுக்கொன்றுள்ளார்.

தற்போது அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான பிரையன்ட், இக்கொலைத் திட்டத்தைப் பற்றி பொலிஸாரிடம் தெரிவித்து பல உயிர்களைக் காப்பாற்றுவதற்கான சந்தர்ப்பம் இருந்தபோதிலும், அவர் அதனைச் செய்யாது கொலையாளிக்கு உதவ முன்வந்ததாக விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கனடிய பொலிஸாருக்கு (RCMP) ‘டிஸ்கோர்ட்’ (Discord) என்ற இணையவழித் தளம் வழங்கியத் தகவல்களைத் தொடர்ந்து, இந்த எல்லை தாண்டிய கூட்டு விசாரணை ஆரம்பமானது.

வான் ரூட்செலார் மற்றும் பிரையன்ட் ஆகியோரின் கணக்குகளுக்கு இடையே ஆயுதங்கள் மற்றும் தாக்குதலை ஒருங்கிணைப்பது குறித்து இடம்பெற்ற உரையாடல்களை, டிஸ்கோர்ட் நிறுவனம் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டது.

குற்றப்பத்திரிகையின் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலோ அல்லது அதற்கு முன்னரோ கொலையாளியான வான் ரூட்செலார் இத்தாக்குதலுக்கான திட்டமிடலைத் தொடங்கியுள்ளார்.

அமெரிக்கவாசியான பிரையன்ட்டுடன் இது குறித்து அவர் நாள்தோறும் உரையாடல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தாக்குதலுக்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பாக, தனது குடும்பத்தின் துப்பாக்கிப் பெட்டியிலிருந்து துப்பாக்கிகளையும் வெடிமருந்துகளையும் திருடி ஒளித்து வைத்திருப்பதாக, அவர் பிரையன்ட்டிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படுகொலைகளைப் புரியும் போது இணையவழியாக Livestream என்று சொல்லப்படும் நேரலை ஒளிபரப்புச் செய்வது தொடர்பாகவும் இவர்கள் இருவரும் ஆலோசித்துள்ளனர்.

இதற்காக ஜனவரி மாதம் Livestream நேரலை ஓலிபரப்புச் சோதனை ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

கொலைத்தாக்குதல் நடந்த நாளன்று ‘ட்விச்’ (Twitch) தளத்தில் Livestream நேரலை ஓலிபரப்புச் சோதனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த நேரலை ஒளிபரப்பு ஆனது, தொடங்கிய சுமார் 20 விநாடிகளில், முடக்கப்பட்டது.

தாக்குதல் இடம்பெற்ற நாளன்று, கொலையாளியான வான் ரூட்செலார் தனது தாயாரையும் சகோதரனையும் சுட்டுக்கொன்ற பின்னர், அவரது காரை எவ்வாறு இயக்குவது என்பது குறித்தும், அமெரிக்க வாசியான பிரையன்ட் அவருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இதன்மூலமாகவே கொலையாளியால் காரை ஓட்டிச் சென்று, பிரிட்டீஷ் கொலம்பியாவிலுள்ள டம்பளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரப் பாடசாலையில் அடுத்தகட்டத் தாக்குதலை நடத்த முடிந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் சீயாட்டிலில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது பிரையன்ட் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், வழக்கு தொடர்பான முதற்கட்ட விசாரணை இம்மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கனடாவுடனான வர்த்தகப் போரை நிறுத்த வேண்டும்: மைக் ரொஜர்ஸ் கோரிக்கை
கனடா

கனடாவுடனான வர்த்தகப் போரை நிறுத்த வேண்டும்: மைக் ரொஜர்ஸ் கோரிக்கை

ஐப்பசி 8, 2026
பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: ஒட்டாவா பாடசாலை ஆசிரியை கைது
கனடா

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: ஒட்டாவா பாடசாலை ஆசிரியை கைது

ஐப்பசி 8, 2026
கனடியக் கவிஞர் ஆன் கார்சனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!
கனடா

கனடியக் கவிஞர் ஆன் கார்சனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!

ஐப்பசி 8, 2026
ருவாண்டாவிற்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு விடுதலை
கனடா

ருவாண்டாவிற்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு விடுதலை

ஐப்பசி 8, 2026
கனடா பாதுகாப்பு கொள்முதல் நடவடிக்கைகளுக்கு புதிய சட்டமூலம்
கனடா

கனடா பாதுகாப்பு கொள்முதல் நடவடிக்கைகளுக்கு புதிய சட்டமூலம்

ஐப்பசி 7, 2026
நேட்டோவில் கைதான கனடியர்: பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டதை உறுதிசெய்த அமைச்சர்
கனடா

நேட்டோவில் கைதான கனடியர்: பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டதை உறுதிசெய்த அமைச்சர்

ஐப்பசி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருக்கு பிணை

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருக்கு பிணை

1 நாள் முன்னர்
யாழ்.பல்கலை பட்டமளிப்பு – இரண்டாம் நாள் அமர்வு ஆரம்பம்

யாழ்.பல்கலை பட்டமளிப்பு – இரண்டாம் நாள் அமர்வு ஆரம்பம்

1 நாள் முன்னர்
பலாலியில் 16ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

பலாலியில் 16ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

4 நாட்கள் முன்னர்
வேலணை மத்திய கல்லூரி மைதானத்திற்கு தீ வைப்பு

வேலணை மத்திய கல்லூரி மைதானத்திற்கு தீ வைப்பு

3 நாட்கள் முன்னர்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check