கியூபெக் மாகாணத்தில் நிலவிவரும் கடுமையான தேவைப்பாட்டின் காரணமாக, மேப்பிள் சிரப் (maple syrup) கையிருப்பு முழுமையாகத் தீர்ந்துவிட்டதாகப் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
வானிலை மாற்றங்களால் மேப்பிள் சிரப் உற்பத்தியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்கவும், விலைகள் மற்றும் விநியோகத்தை நிலையாகப் பராமரிக்கவும் கியூபெக் மேப்பிள் சிரப் உற்பத்தியாளர்கள் சங்கம் ஒரு மூலோபாயக் கையிருப்பு முறையைப் பராமரித்து வருகிறது.
இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்துவரும் விற்பனை மற்றும் கடந்த ஆண்டு அமெரிக்காவில் நிலவிய வரி விதிப்பு அச்சம் காரணமாகப் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெருமளவில் சிரப்பைக் குவித்துக்கொண்டமையால், இந்தக் கையிருப்பு முற்றிலும் பூஜ்ய நிலைக்குக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மேப்பிள் சிரப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் லுக் கூலே (Luc Goulet) இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
தொழில்துறையின் பொருளாதாரப் பங்களிப்பு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டபோது ஊடகங்களிடம் பேசிய போதே லுக் கூலே, தங்களது மேப்பிள் சிரப் மூலோபாயக் கையிருப்பு முற்றிலுமாகத் தீர்ந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலங்களில் வானிலை ஒத்துழைக்கத் தவறினால், உற்பத்தி பாதிக்கப்பட்டு வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.











