பிரபல கனேடிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ‘பொம்பார்டியர்’ (Bombardier) நிறுவனத்தின் விமானங்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுவதற்குத் தடை விதிக்கப்படும் என்ற தனது முந்தைய எச்சரிக்கையை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீளப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களில் ‘பொம்பார்டியர்‘ (Bombardier) நிறுவனம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவது தாமதமாகவே தமக்குத் தெரியவந்ததாகக் கூறிய டொனால்ட் ட்ரம்ப் இதனையடுத்தே, தமது முந்தைய எச்சரிக்கையை மீளப் பெற்றுக் கொண்டுள்ளார்.
கான்சாஸ் (Kansas) மாகாணத்தின் விச்சிடா (Wichita) நகரின் புறநகர்ப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே டிரம்ப் இதனைத் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் பொம்பார்டியர் நிறுவனத்தை ஒரு முழுமையான கனேடிய நிறுவனமாக மட்டுமே தாம் கருதியதாகவும், ஆனால் அமெரிக்காவிலும் அதன் கிளைகள் இயங்குவதை இப்போது கண்டறிந்துள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் அந்த மக்களின் வேலைவாய்ப்புகளும் நலன்களும் பாதுகாக்கப்படும் எனவும் தற்போது உறுதியளித்துள்ளார்.











