EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக பிரதேசவாதத்தை கையில் எடுத்துள்ளார்கள்.

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக பிரதேசவாதத்தை கையில் எடுத்துள்ளார்கள்.

புரட்டாதி 13, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

கிழக்கு மாகாணத்தில் பிரதேச வாதத்தை முன்னிறுத்தி தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். இவ்வாறு அவர்கள் பேசி கிழக்கு மாகாணத்தை சிங்களவர்களிடம் பறிகொடுக்க முயல்கின்றார்கள். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஈ . பி . ஆர் . எல் . எப் . கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில். இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவாக டக்ளஸ் தேவானந்தா , மட்டக்களப்பில் இருந்து பிள்ளையான் வியாழேந்திரன் போன்றோர் பேசி வருகின்றனர்.

எனது கேள்வி கிழக்கில் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் இருந்தீர்கள் உங்களால் மேய்ச்சல் தரை பிரச்னையை தீர்க்க முடியவில்லை இப்ப கூட நீங்கள் அது தொடர்பில் பேச கூட விரும்பவில்லை. குறைந்த பட்சம் கன்னியா வென்னீர் ஊற்றை காப்பாற்ற முடிந்ததா ? கல்முனை பிரதேச சபையை தரமுயர்த்த முடிந்ததா ?

அதேபோன்றே வடக்கில் கடற்தொழில் அமைச்சராக இருந்தும் இன்று வரை இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடிந்ததா? எங்களுடைய மீனவர்களுக்கு என்ன செய்தீர்கள் ? கடற்தொழில் அமைச்சராக இருந்து எமது மீனவர்களின் பிரச்னையை தீர்க்க முடியவில்லை.

ஆனால் இப்போதும் மீண்டும் ரணில் ஜனாதிபதியாக வர வேண்டும் என கோருகின்றார்கள். இது அவர்களின் சட்டைபையை நிரப்பும் செயல்.

பிரதேச வாதங்களை முன்னிறுத்தி கிழக்கில் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களுக்கு வடக்கு கிழக்கு இணைப்பை பற்றி கூட அக்கறை இல்லை. பறிபோகும் கிழக்கை மீட்க இவர்கள் என்ன செய்தார்கள். தற்போதும் பிரதேச வாதங்களை பேசி கிழக்கை பறிகொடுக்க முயல்கின்றனர். இதனை கிழக்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே இலங்கையில் வாழும் அத்தனை தமிழ் மக்களும் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In