EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Kilinochi கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 சாரதிகள் கைது.

Kilinochi கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 சாரதிகள் கைது.

புரட்டாதி 19, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

அம்பாறை காரைதீவு, கிளிநொச்சி, வெயாங்கொடை, கட்டுகஸ்தோட்டை , வவுனியா, ஓமந்தை பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுமி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் 4 பேரை கைது செய்துள்ளதாக அந்தந்த பிரதேச பொலிசார் தெரிவித்தனர்.

அம்பாறை காரைதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிப்பள்ளியில் இருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுடன் குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் இன்று வியாழக்கிழமை (19) மோதிய தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய தந்தை படுகாயமடைந்ததுடன் அவரது 14 வயது மகளான சிறுமி உயிரிந்துள்ளதுடன் படுகாயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்துடன் பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளனர்.

அதேவேளை கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சிக்கு செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இன்று (19) அதிகாலை வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞன் மீது டிப்பர் வாகனம் மோதிய விபத்தில் பன்னங்கண்டி பகுதியைச்சேர்ந்த அந்தோனி அல்பிரட்அனுஷன் என்ற இளைஞன் உயிரிழந்ததுடன் டிப்பர் சாரதியை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் சம்பவ தினமான நேற்று இரவு பிரயாணித்த மோட்டார் சைக்கிள் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வீதி ஓரத்தில் துவிச்சக்கரவண்டி ஒன்றுடன் நின்றிருந்வர் மீது மோதிய விபத்தில் மோட்டாரில் பிரயாணித்த ஓமந்தை பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 48 வயதுடைய இருவர் ஒயிரிழந்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை வெயாங்கொடை மினுவாங்கொடை பிரதான வீதியில் 20 மையில்கல் பகுதியில் வீதியை குறுக்கறுத்த பெண் ஒருவர் மீது மொட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் படுகாயமடைந்த வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண்ணை மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரை பொலிசார் கைது செய்தனர்.

கண்டி-யாழ்ப்பாணம் ஏ-09 வீதியில் கட்டுகஸ்தோட்டை நகரில் பாதசாரி ஒருவர் மீது கார் மோதிய விபத்தில் 71 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து கார் சாரதியை கைது செய்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து இடம்பெற்ற பிரதேசங்களைச் சேர்ந்த பொலிஸ் நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In