கனடாவில் தற்பொழுது மக்கள் தொகை 41 மில்லியனை கடந்துவிட்டதால் அதைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர், கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையை 35 சதவிகிதம் குறைத்துள்ளதாகவும் , அதாவது, 364,000 சர்வதேச மாணவ மாணவியருக்கு மட்டுமே கல்வி அனுமதி வழங்க இருப்பதாக தெரிவித்தார்.
எதிர் வரும் ஆண்டுகளில் இன்னும், 10 வீதத்தினால் குறைத்து 327,000 சர்வதேச மாணவர்களுக்கு மட்டுமே கல்வி அனுமதி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கனடா தொடர்ந்து சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை அதிகரித்துவருவதால், மாணவர்களின் பார்வை வேறு நாடுகள் பக்கம் திரும்பிவருகிறது






