EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
Jaffna உலக சுற்றுலா தின நிகழ்வு பற்றிய ஊடக விவரிப்பு!

Jaffna உலக சுற்றுலா தின நிகழ்வு பற்றிய ஊடக விவரிப்பு!

புரட்டாதி 24, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்வுகளின் வரிசையாக உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு, “சுற்றுலாவும் அமைதியும்” என்ற தொனிப்பொருளில் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது.

இந்தியாவின் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

செப்டெம்பர் 27ஆம் திகதி ஆரம்பமாகும் நிகழ்வுகள் 29ஆம் திகதி வரையிலான மூன்று நாட்களும் காலை 10 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை உணவு மற்றும் கைப்பணிப் பொருள் சந்தை, கலாசாரத் திருவிழா, மாணவர்களின் உணவுச்சந்தை போன்றன யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாளாகத்தில் இடம்பெறவுள்ளது.

முதலாம் நாள் நிகழ்வு “சுற்றுலாவும் அமைதியும்“ என்ற தொனிப்பொருளில் ஆய்வரங்காக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஆராத சுருதி உரையினை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் பிறேம குமார டி சில்வா நிகழ்த்தவுள்ளார்.

மற்றுமொரு ஆராதசுருதி உரையினை Jetwing Symphony குழுமத்தின் தலைவர் கிரான் குரே நிகழ்த்தவுள்ளார்.

தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடலில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தலைவரும் பேராசிரியருமான சு.ஊ அனு சந்திரன், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சுற்றுலாத்துறைக் கலாநிதி வெங்கட் ராவோ, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் சமூகவியல் கற்கைகளின் தலைவர் கலாநிதி பத்மநேசன், Airport and Aviation Service Sri Lanka தனியார் நிறுவனத்தினுடைய சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் துறைத் தலைவர் சிமித் டி சில்வா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இரண்டாம் நாள் நிகழ்வாக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த பேராசிரியர்களால் வடமாகாண சுற்றுலா மற்றும் தொழில் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தொழில்திறன் மேம்படுத்தல் செயலமர்வுகள் நடைபெற உள்ளன.

மூன்றாம் நாள் நிகழ்வுகளாக கலைநிகழ்வுகளும் பண்பாட்டு அமர்வுகளும் இடம்பெற உள்ளன.

இந்த நிகழ்வுகளுக்கு சமாந்தரமாக செப்ரம்பர் 27ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரையிலான மூன்று நாட்களும் காலை 10 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை சிறிய நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சிகளும் சந்தையும் நடைபெற உள்ளன.

அத்தோடு இம் மூன்று நாட்களும் மாலை 6 தொடக்கம் இரவு 9 மணி வரை கைலாசபதி கலையரங்கில் கலைநிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன.

இந் நிகழ்வுகளுக்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு யாழ் . பல்கலைக்கழக நிர்வாகம் கோரியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In