அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் நெருங்கும் போது, கடந்த அமைச்சரவை அரசு ஊழியர்களின் சம்பளம் ஜனவரி முதல் உயர்த்தப்படும் என்று திடீர் முடிவொன்றை எடுத்தது.முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியுமா? எப்படி? என யோசித்து, நிதி நிலைமையை வைத்து புதிய முடிவை எடுப்போம். இல்லை என்று சொல்ல மாட்டோம். நிதி நிலையைப் பொறுத்துதான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு முடிந்ததும், அரசு ஊழியர்களின் சம்பளம் ஜனவரி முதல் உயர்த்தப்படும் என்று கடந்த அமைச்சரவை திடீர் முடிவு எடுத்தது. ஆனால் நாங்கள் விசாரித்தபோது நிதி அமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது தான் உண்மையில் நடந்தது என கூறியுள்ளார்.





