EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வன்னி தேர்தலில் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை பெற்று நிச்சயமாக முன்னணி இடத்தினை அடைவோம் – த.சித்தார்த்தன்

வன்னி தேர்தலில் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை பெற்று நிச்சயமாக முன்னணி இடத்தினை அடைவோம் – த.சித்தார்த்தன்

ஐப்பசி 21, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்,

மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு முகம் கொடுப்பது தொடர்பாகவும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் எமது இரு வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்பதை தெரிவிப்பதற்காகவே இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளோம்.

தேர்தல் பிரச்சாரத்தினை எமது கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஏனையவர்களுக்கு வன்னியிலே முன்னெடுத்து வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஒரு முன்னிலையில் காணப்படும் கட்சியாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக தமிழ் மக்களை பொருத்தவரை இக் கட்சியினை தங்களுடைய கட்சியாகவே பார்க்கின்றனர்.

மேலும் வன்னி தேர்தலில் வரக்கூடிய ஆசனங்களில் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை பெற்று நிச்சயமாக முன்னணி இடத்தினை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

இத்தேர்தலில் ஒரு ஆசனம் கிடைத்தாலும் அது எங்களது வெற்றியாகவே பார்க்கின்றோம்.

குறிப்பாக தமிழ் மக்களினுடைய ஒரு கட்சியாகவும் தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதையினை காட்டக் கூடிய கட்சியாகவும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வெல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருக்கின்றது.

தமிழ் கட்சிகளை பொறுத்த வரையிலே பிரிந்து இருக்கின்றன. முக்கியமாக தமிழரசுக் கட்சி இரண்டாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று மூன்றாக பிரிந்து நிற்கின்றன.

மேலும் தமிழரசு கட்சி இருவராக பிரிந்து போட்டியிடுகின்றனர். நாங்கள் ஒருவராக போட்டியிடுகின்றோம். கடந்த தேர்தலிலே 40க்கு மேற்பட்ட.கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் போட்டியிட்டு இருந்தன. இந்நிலைமை இங்கு மட்டுமின்றி ஏனைய இடங்களிலும் அதிகமாகவே இருந்தது. தற்போது இந்நிலை சற்று அதிகமாக காணப்படுவதோடு அதிகளவான வேட்பாளர்கள் தற்போது போட்டியிடுகின்றனர். இந்நிலையிலே மக்கள் தங்களுக்கு எந்த கட்சி தேவை அல்லது எந்த கட்சி தங்களது பிரச்சினைகளை சரியான முறையிலே கையாளும் என்பதை தெளிவாகத் புரிந்து கொண்டவர்கள்.

தற்போதைய தேர்தலிலே பல காரணங்களுக்காக சுயேட்சைக்குழுக்களில் பலர் போட்டியிட்டாலும் மக்கள் அவர்களிற்கு வாக்களிப்பதில்லை. குறிப்பாக இது கடந்த கால தேர்தல்களிலும் காணக்கூடியதாக இருந்ததோடு தற்போதைய தேர்தலிலும் இருக்கும் என்றாலும் கட்சிகளின் மத்தியிலே எங்களது கட்சி முன்னணியில் இருக்கும் என நம்புகின்றேன்.

கடந்த காலங்களில் தமது உயிர்களையும் துச்சம் எண்ணி போராடிய ஐந்து கட்சிகளை உள்ளடக்கி ஒரு கூட்டமைப்பாக தமிழ் மக்கள் விரும்புகின்ற ஒற்றுமையுடன் பயணிக்கின்ற ஒரு கட்சியாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி போட்டியிடுகின்றது.

கடந்த காலங்களைப் போல் அல்லாமல் ஐந்து கட்சிகள் இணைந்து தேர்தல் ஆணைக் குழுவில் ஒரு கட்சியாக பதியப்பட்டு பயணிக்கின்றோம். எங்களுக்குள்ளே சில சில பிரச்சனைகள் தேர்தல் காலத்தில் ஏற்பட்டிருந்தாலும் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஒன்றாக நிற்பதோடு தமிழ் மக்களின் விடுதலைக்காக ஒன்றாக உழைப்பதோடும், கடந்த காலங்களிலே இக்கூட்டணியில் உள்ள கட்சிகள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் போது இப்பிரதேசங்களில் பொருளாதார அபிவிருத்திக்காக உழைத்திருக்கின்றோம்.

மக்களைப் பொருத்தவரை ஒரு நம்பிக்கைக்கு உரிய கட்சியாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி இருக்கின்றது என்பதை நான் நம்புகின்றேன் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In