EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான முழு அதிகாரம் ஜனாதிபதியிடம் – செல்வம் அடைக்கலநாதன்

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான முழு அதிகாரம் ஜனாதிபதியிடம் – செல்வம் அடைக்கலநாதன்

கார்த்திகை 11, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில் அவர் தற்போது தெரிவித்துவரும் கருத்து தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் அரசியல் நாடகம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பல கூட்டங்களில் தமிழ் தலைவர்கள் தன்னோடு எந்த விடயத்திலும் கலந்துரையாடுவதில்லை. அதனால் தற்போது பஸ் சென்று விட்டது. இனி யாருடைய தயவும் தேவையில்லை அந்த பஸ் ஓடும் என்று கூறியிருக்கின்றார்.

இந்த நேரத்தில் நான் ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன். ஜேவிபி இந்த பாராளுமன்றத்திலே அதிக ஆசனங்களை பெற்றுக் கொள்ளாது. அந்த நேரத்திலே ஓடுகின்ற பஸ்ஸை நிறுத்தி ஆளுமையுள்ளவர்களை ஏற்றிச் செல்ல வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும். அவ்வாறு தான் அவர் இந்த அரசாங்கத்தை கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும்.

தற்போது ஜனாதிபதி அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என்று கூறி இருக்கின்றார். இதிலிருந்து அவர் தமிழ் மக்களுடைய வாக்குகளை கபலீகரம் செய்வதற்கான அரசியல் நாடகமொன்றை நடத்துகின்றார் என்பது தெரிகிறது.

ஜனாதிபதியை பொறுத்தவரைக்கும் பொது மன்னிப்பின் அடிப்படையிலேயே கைதிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் இருக்கின்றது. ஆனால் இவரும் கடந்த ஜனாதிபதிகள் போன்று அரசியலுக்காக கருத்துக்களை கூறுவதாக தான் இருக்கின்றது.

இதனூடாக தெரிய வருவதானது, கடந்த ஜனாதிபதிகள் போன்றே இவரும் செயற்படுவார் என்பது தான் தெட்டத் தெளிவாகின்றது. ஆகவே மக்கள் இவருடைய பசப்பு வார்த்தைகளுக்கு ஏமாறக்கூடாது.

ஜனாதிபதி நினைத்தால் தற்போதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியும். இந்த தேர்தல் முடிந்ததன் பின்னர் தான் விடுதலை செய்ய வேண்டும் என்கின்ற தேவை இல்லை. ஆகவே அரசியல் கைதிகள் விடயத்தில் அவர் தமிழ் மக்களின் வாக்குகளை சுவீகரிப்பதற்கான அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார் என்பதே வெளிப்படை.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In