மன்னார் மாவட்டத்தில் நாளை மறுதினம் புதன்கிழமை வடக்கு மாகாண கௌரவ நா.வேதநாயகன் தலைமையிலான நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் காலை இடம்பெறவுள்ள குறித்த நடமாடும் சேவையில், மன்னார் மாவட்ட பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், காலநிலை மோசமடைந்தால் நடமாடும் சேவை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்படும் என ஆளுநரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.





