EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழில் இரு வாரங்களில் 697.4 மில்லி மீற்றர் மழை.

யாழில் இரு வாரங்களில் 697.4 மில்லி மீற்றர் மழை.

மார்கழி 1, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் கடந்த 18ஆம் திகதி முதல் இன்றைய தினம் டிசம்பர் மாதம் 01ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில், 697.4 மில்லி மீற்றர் மழை கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், அதனால் 21ஆயிரத்து 987 குடும்பங்களை சேர்ந்த 73ஆயிரத்து 693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவும் யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ் . மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 29ஆம் திகதி 82 பாதுகாப்பு நிலையங்களில் 2ஆயிரத்து 163 குடும்பங்களை சேர்ந்த 7ஆயிரத்து 417 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பலர் தற்போது தமது வீடுகளுக்கு திரும்பிய நிலையில் சில இடங்களில் தற்போதும் வெள்ளம் காணப்படுவதனால் , இன்றைய தினம் 01ஆம் திகதி வரையில், 26 பாதுகாப்பு நிலையங்களில் 695 குடும்பங்களை சேர்ந்த 2ஆயிரத்து 393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான சமைத்த உணவுகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். அவர்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் கால பகுதி வரையில் அவர்களுக்கான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் உப்புக்கேணி எனும் பிரதேசத்தில் வெள்ளம் வடிந்தோட முடியாத நிலைமை காணப்படுவதால் , 50 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த பிரதேசத்தில் இருந்து வெள்ள நீர் வடிந்தோட வழியில்லாததால் , நீர் இறைக்கும் இயந்திரம் ஊடாக வெள்ள நீரினை இறைத்து வெளியேற்றும் நடவடிக்கையை எடுத்துள்ளோம்.

எதிர்காலத்தில் இவ்வாறான வெள்ள அனர்த்தம் ஏற்படாதவாறு , வடிகால் அமைப்புக்களை சீர் செய்யவும் , பொறிமுறைகளை உருவாக்கவும் அனைத்து திணைக்களங்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து இருக்கிறோம்.

எதிர்வரும் நாட்களில் பிரதேச செயலக ரீதியாக, எப்பகுதிகளில் வெள்ளம் வடிந்தோட முடியாத நிலை காணப்படுகிறது என்பதனை கண்டறிந்து அது தொடர்பிலான திணைக்களத்தினருடன் நேரடியாக அந்த இடங்களுக்கு விஜயம் செய்து ஆராய்ந்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானித்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In