“எரியும் நினைவுகள்” யாழ்பாண நூலகத்தின் கதை என்னும் ஆவணப்படத்தின் திரையிடலும் கலந்துரையாடலும் நேற்றைய தினம் புதன்கிழமை யாழில் இடம்பெற்றது.
ஆவணப்பட இயக்குனர் எஸ்.சோமிதரன் தலமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
திரையிடல் நிகழ்வும் கலந்துரையாடலும் மாலை யாழ்ப்பாண பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஆவணப்படத் திரையிடலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் ஆவணப்படம் சார்ந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.





