இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் குழந்தை பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண்ணின் கணவன் உடனிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு காசல் வீதியிலுள்ள மகபேற்று வைத்தியசாலையில் அதுதொடர்பான நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
அங்கு பிரசவத்திற்கான தனித்தனி அறைகள் காணப்படுகின்றமையினால் முதற்கட்டமாக குழந்தை பிறப்பின்போது தந்தைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தாய்சேய் நலன் தொடர்பில் அரச வைத்தியசாலைகள் சிறப்பான பங்காற்றிவருகின்றன.
குழந்தை பிறப்பின்போது கணவன் மனைவியுடன் இருப்பது உணர்வு மற்றும் உடல் ரீதியான ஆதரவை வழங்குகிறதென ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.





