வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியின் மாநாடு ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த மாநாடு இன்று பிற்பகல் 7 மணியளவில் தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.
நிகழ்வில், சுனில்கந்துநெத்தி, சந்திரசேகரன், சமீர அல்விஸ் உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சமகால அரசியல் தொடர்பில் மாநாட்டில் உரையாற்றினர்.
கிளிநொச்சியில் உள்ள வங்கி மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலரை ஒருங்கிணைத்து குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.