தமிழகத்தின் மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 மூட்டை இஞ்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் – ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரக்கையார் பட்டணம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக இஞ்சி கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 மூட்டை இஞ்சிகளை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.