EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
34ஆவது தியாகிகள் தினம்.

34ஆவது தியாகிகள் தினம்.

ஆனி 18, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கான ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் போராட்ட அமைப்புகள் பிளவுபட்டு நின்று எமது இலக்கை அடைய முடியாது என்பதை உணர்ந்துகொண்ட இடதுசாரி ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் க.பத்மநாபா அவைகள் மத்தியில் ஒரு ஐக்கியத்தை உருவாக்குவதற்காக கடும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் அடைந்தார் என ஈழமக்கள் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது…

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை தோற்றுவித்தவர்கள் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகளாக இருப்பினும் அன்றைய பூகோள அரசியல் சூழலில் அதற்கு எண்ணெய் ஊற்றி இனவாதத் தீயை அணையாமல் பார்த்துக்கொண்டது ஏகாதிபத்திய சக்திகள் என்பதை சரியாக இனங்கண்டு ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரான புரட்சிகர அமைப்புகளுடன் கரம்கோர்த்து ஈழ மக்களின் நண்பர்களையும் எதிரிகளையும் சரியாக அடையாளம் காட்டினார்.

அதன் காரணமாகவே ஏகாதிபத்திய சக்திகளின் சூழ்ச்சிகளால் ஐக்கியம் சிதைக்கப்பட்டு, எது தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று தஞ்சம் அடைந்தோமோ அதே தமிழகத்தில் எமது செயலாளர் நாயகத்துடன் பதின்மூன்று தோழர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதன் விளைவே எமது செயலாளர் நாயகத்தின் மறைவிற்குக் காரணமாக அமைந்தது.

ஆயுதப் போராட்ட எழுச்சியின் விளைவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஏற்படுவதற்கும் மாகாணசபை உருவாகுவதற்கும் காரணமாக அமைந்தது. மாகாணசபை முறைமையை எப்படியாவது சீர்குலைத்துவிட வேண்டும் என்பதில் சிங்கள பௌத்த பேரினவாதமும் ஏகாதிபத்திய சக்திகளும் கங்கனம் கட்டி செயற்பட்டன. இதன் பின்விளைவுகளை எமது சமூகம் நன்கு அனுபவித்துள்ளது.

அவருடைய திசை வழியில் நின்று தொலைநோக்குச் சிந்தனையுடன் இன்று எமது உரிமைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் ஜனநாயகத்தின் ஊடாக எமது உரிமைகளை அடைவதற்கான சூழலை ஏற்படுத்த விரும்புகின்றோம். அந்த முயற்சியில் எமது தலைவர் தோழர் க.பிரேமச்சந்திரனின் தொலைநோக்குப் பார்வையில் உருவான ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் என்னும் எண்ணகரு மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துவரும் நிலையில் அதனைக் குழப்புவதற்கு தென்னிலங்கை அரசியல் சக்திகளுடன் எமது மக்கள் தலைவர்களும் கரம்கோர்த்திருப்பது வேதனையளிக்கிறது.

இன்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இலங்கையின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும் தென்பகுதி ஜனாதிபதி வேட்பாளர்கள் நாட்கணக்கில் வடக்கில் தங்கியிருந்து தமது பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கும் தமிழ் பொதுவேட்பாளர் எண்ணக்கருவும் ஒரு காரணம் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ள நிலையில் அதனை வலுப்படுத்துவதற்கு அனைத்து அரசியல் தலைமைகளும் இதய சுத்தியுடன் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றோம்.

மக்களை வழிநடத்த வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள் ஒரு பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை இன்றைய அரசியல் சூழல் ஏற்படுத்தியுள்ளது. முப்பத்து நான்காவது தியாகிகள் தினத்திலும் தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியிலும் பொதுஅமைப்புகள் மத்தியிலும் இதய சுத்தியுடனான ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பற்றுறுதியுடன் ஈடுபட்டு வருகின்றது.

எமது பாசமிகு தோழனும் நேசமிகு ஆசானுமான தோழர் பத்மநாவின் கூற்றுக்கு அமைய ஐக்கியம் என்னும் தளத்தில் நின்று இறுதி வெற்றிவரை உறுதியுடன் போராடுவோம் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 34ஆவது தியாகிகள் தினத்தில் உறுதியளிக்கிறது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  தூய்மை பணி
இலங்கை

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தூய்மை பணி

ஆவணி 8, 2026
கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

ஆவணி 8, 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 8, 2026
குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

ஆவணி 8, 2026
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

ஆவணி 8, 2026
தொண்டமானாறு  நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்
அண்மைய செய்திகள்

தொண்டமானாறு நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்

ஆவணி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

என்ன நடந்தாலும் மக்களுக்காக வங்கதேசம் திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்

என்ன நடந்தாலும் மக்களுக்காக வங்கதேசம் திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்

3 நாட்கள் முன்னர்
இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முற்பட்ட 297 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முற்பட்ட 297 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

10 மணத்தியாலங்கள் முன்னர்
ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம்

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம்

5 நாட்கள் முன்னர்
மன்னாரில் இரவு பகல் பாராது தொடர்ந்து இடம்பெறும் மின்தடை – மின் பாவனையாளர்கள் விசனம்

மன்னாரில் இரவு பகல் பாராது தொடர்ந்து இடம்பெறும் மின்தடை – மின் பாவனையாளர்கள் விசனம்

4 நாட்கள் முன்னர்
கியூபெக்கில் செவிலியர்களைத் தொடர்புகொள்வதற்கான காத்திருப்பு நேரம் கணிசமாக அதிகரிப்பு

கியூபெக்கில் செவிலியர்களைத் தொடர்புகொள்வதற்கான காத்திருப்பு நேரம் கணிசமாக அதிகரிப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In