வவுனியா மற்றும் மதவாச்சியின் பல கிராமங்களில் 2.3 மெக்னிடியூட் நில அதிர்வு ஏற்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படாது நிலையில் மக்கள் தங்களது வீடுகளில் ஐன்னல்கள் கதவுகள் சில நொடிகள் பலத்த சத்தத்துடன் அதிர்ந்ததாக தெரிவிக்கின்றனர்.
மேலும் வாழ்க்கையில் முதன் முறையாக இதுபோன்ற அனுபவத்தை உணர்ந்ததாக மேலும் தெரிவித்தனர்.





