தேவையான பொருட்கள்
பச்சரிசி சாதம் – 2 கப்
துவரம்பருப்பு – வேக வைத்தது 1 கப்
மிளகு – 1 1/2 ஸ்பூன்
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
தனியா – 1 ஸ்பூன்
கடலைபருப்பு – 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
வரமிளகாய் – 10
பரங்கிகாய் – 100 கி
கத்திரிக்காய் – 100 கி
அவரைக்காய் – 100 கி
சௌவ்சௌவ் – 100 கி
காராமணி – 100 கி
கொண்டைகடலை – 100 கி
பச்சை மிளகாய் – 2
கடுகு – தாளிக்க
கறிவேப்பிலை – தாளிக்க
புளி – ஒரு எலும்மிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தாளிக்க
நெய் – தேவையான அளவு
மசாலா தயாரிக்கும் முறை
ஒரு வாணலியில் மிளகு, வெந்தயம், தனியா மூன்றையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும், பின்னர் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த அனைத்தையும் நன்று ஆறியவுன் மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றவும். அடுத்து கடுகு சேர்க்கவும். கடுகு நன்கு பொரிந்தவுடன், வரமிளகாய் 3, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள பரங்கிகாய், கத்திரிக்காய், அவரைக்காய், சௌவ்சௌவ் ஆகிய காய்கறிகளை போட்டு 5 நிமிடம் நன்கு சமைக்கவும்.
பின்னர் வேக வைத்த காராமணி, கொண்டைகடலை சேர்க்கவும். அதன் பின் வேகவைத்த துவரம் பருப்பை சேர்க்கவும்.
காய்கறி மற்றும் பருப்பு இரண்டையும் சேர்த்து 5 முதல் 8 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.
இந்த நிலையில் புளி தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் சமைக்கவும்.
இவையனைத்து நன்கு வெந்தவுடன் தயாரித்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்க்கவும்.
இதனுடன் பெருங்காயம், வேகவைத்த பச்சரிசி சாதத்தை சேர்க்கவும்.
பின்னர் ஒரு 1/2 கப் தண்ணீர், மற்றும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.
இவை அனைத்தையும் 5 முதல் 10 நிமிடம் சமைக்கவும். இதோ சுவையான பெருமாள் கோவில் கதம்ப சாதம் ரெடி.