EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மட்டக்களப்பு ஜூலை கலவரத்தில் தமிழர்களை கொலை செய்த பட்டியலில் ஜே.வி.பி. அடங்கும் – தர்மலிங்கம் சுரேஸ்

மட்டக்களப்பு ஜூலை கலவரத்தில் தமிழர்களை கொலை செய்த பட்டியலில் ஜே.வி.பி. அடங்கும் – தர்மலிங்கம் சுரேஸ்

ஆடி 9, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

கடந்த 1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தில் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொலை செய்த பட்டியலில் ஜே.வி.பி. கட்சி தமிழர்களை அழிக்க பிள்ளையான், கருணாவிற்கு பலகோடி பணமும் ஆயுதங்களை வழங்கியுள்ளனர். அதேவேளை தமிழர்களை அடிமையாக வாழவைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன்; பிள்ளையானுக்கு கொடுக்கப்பட்ட பதவிகள் இராஜாங்க அமைச்சு என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு எல்லைக் கிராமமான ஈரலக்குளம் இலுக்கு பிரதேச முதியோர் சங்கத்திற்கு நா.உ. எஸ்.கஜேந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் 46 கதிரைகள் ரெண்டுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை (9) இடம்பெற்றது. இதன்போது அதனை வழங்கிவைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

ஈரலக்குளம் ஒரு பின்தங்கிய எல்லைக்கிராமம் இதில் இலுக்கு கிராமம் பெரியவெட்டுவான் கிராமங்களில் உள்ள மக்கள் பல கஸ்டத்துடன் வாழுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்தினின் நிதி ஒதுக்கீட்டில் மாவட்டத்துக்கு 50 இலச்சம் ரூபா பணம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் அவசியமாக தேவைப்படும் கிராமங்களுக்கு உதவியை பகிர்ந்தளித்துள்ளோம்.

அதனடிப்படையில் ஈரலக்குளம் கிராம முதியோர் சங்கத்திற்கு அவசியமான கதிரைகள் மற்றும் ரென்டுகளை வழிங்கியுள்ளோம். இதைவிட எமது மக்களுக்கு தேவைப்பாடுகள் மிக கூடுதலாக இருக்கின்றது.

இந்த கிராமத்திற்காக மின்சார தூண்களை யானைகள் சரித்து வீழ்தியுள்ளது. மின்சார வயர்கள் நிலத்தில் உள்ளது பொது போக்குவரத்துக்கள் மற்றும் அடிப்படை வசதிகளின்றி கஷ்டங்களுக்கு மத்தியில் உங்கள் இடங்களை விட்டுக் கொடுக்க கூடாது என்ற அடிப்படையில் யானை தொல்லையில் உயிரை பயணம் வைத்து வாழ்ந்து வருகின்றனர்.

நாடாளுமன்ற உறப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் நோக்கம் தமிழ் மக்களை அடிமை சாசனத்தில் இருந்து மீட்க வேண்டும் என்பது எமது நோக்கம்.

சிங்கள தேசம் எங்களை அடக்கி ஓடுக்கி வந்த காலத்திலேயே நாங்கள் கொள்கையளவில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்காமல் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். அதே மாதிரிதான் மட்டு மாவட்டத்தில் எல்லைப்புற கிராமங்களில் ஒவ்வொரு தமிழர்களும் தங்கள் நிலம் பறிபோக கூடாது என செயற்படுகின்றார்கள்.

தமிழர்கள் தமது உரிமைக்காக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எங்களை காப்பாற்றக் கூடிய அங்கீகரிக்க கூடிய விதமாக எந்தவொரு சர்வதேச நாடுகளும் முன்வரவில்லை நடந்த இனவழிப்பு தொடர்பாக யாரும் குரல் கொடுக்க வரவில்லை.

அப்படி இருந்தும் எமக்கு நடந்த அநியாயத்தை சொல்லிக் கொண்டிருக்காவிட்டால் நாங்கள் மிக விரைவாக இந்த தீவில் இருந்து அழித்தொழிக்கப்படுவோம். இந்த இனவழிப்பு தொடர்பாக விடுதலை கிடைக்கும் வரை தொடர்ச்சியாக வலியுறுத்துவோம். இந்த தீவிலே சிங்கள மக்களுக்கு இருக்கும் உரிமை போல தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ கூடிய சூழ்நிலை ஏற்படும் வரை எள்ளளவு கூட எமது கொள்கையில் இருந்து விட்டுக் கொடுக்க மாட்டோம்.

4 இலச்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்களையும் ஆயிரக்ணக்கான மாவீரர்களை இழந்திருக்கின்றோம். முள்ளிவாய்க்கால் பேரழிவை சந்தித்திருக்கின்றோம். இதெல்லாம் இனத்தின் இருப்புக்காக கொடுக்கப்படவில்லை.

கிழக்கு மண்ணை இன்று பிள்ளையான் பறிகொடுத்துக் கொண்டிருக்கின்றார். கடந்த காலத்தில் இராணுவத்துடன் துணை இராணுவ குழுவாக சேர்ந்து செயற்பட்டதுடன் ஜூலை கலவரத்தில் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொலை செய்த பட்டியலில் ஒருவர் ஜே.வி.பி கட்சி அனுரகுமார திஸாநாயக்கா அவர் ஆயுதங்களையும் பலகோடி ரூபா பணத்தையும் பிள்ளையானுக்கு கருணாவிற்கும் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

எனவே கொடுக்கப்பட்ட ஆயுதங்கள் எதற்காக தமிழர்களை அழிப்பதற்காகவா? கிழக்கில் நடந்த படுகொலைகளை அரங்கேற்றியது யார் இராணுவத்துடன் சேர்ந்த இந்த தரப்பினர் தான் இன்று உங்கள் மத்தியில் பூவும் பொட்டுமாக திரிகின்றனர்.

இவ்வாறு வளங்கள் முழுவதையம் விற்கின்றனர். அடுத்தது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர் ஒருபக்கம் இங்குள்ள வளங்களை சுரண்டி சிங்களவர்களுக்கு கொடுக்கின்றனர். இந்த நிலைபாடு தொடர்பாக நீங்கள் முடிவெடுக்க வேண்டும் நீங்கள் தான் வாக்களித்து அனுப்பினீர்கள் இந்த வாக்குகள் அளிக்கப்பட்டது உங்களை அழிப்பதற்கு.

தலைவர் பிரபாகரனின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பிறகு தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இலங்கையை மையப்படுத்தி நடக்கும் பூளோக அரசியல் போட்டி ஒரு நாள் பரிகாரம் கிடைக்கும் எங்கள் விடுதலைப் போராட்டம் வெல்லும் ஆகவே எமது நிலத்தை பறிபோக அனுமதிக்க கூடாது.

எதிர்கால பிள்ளைகளுக்கு வரலாறு சொல்லிக் கொடுக்க வேண்டும். அதனை மூடிமறைக்க கூடாது தமிழ் மக்களை சிங்களத்துடன் சேர்த்து கரைத்து இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்ற நிலைப்பாட்டை கொண்டு வருவதற்காகவும் தமிழர்களை அடிமையாக வாழ வைப்பதற்கான திட்டம் தான் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கொடுக்கப்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான இருவருக்கு கொடுக்கப்பட்ட பதவி இராஜாங்க அமைச்சு.

எனவே தமிழர்கள் முட்டாள்தனமாக இருக்க முடியாது விடுதலை போராட்டத்தை உடைத்த கருணா இன்று எங்கே? எங்களை எப்படியாவது அடித்து நொருக்க வேண்டும் என்பது சிங்களவர்களின் நிலைப்பாடு ஒழிய எங்களை வாழவைக்க வேண்டும் என்ற சிந்தனையில்லை இல்லை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In