இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்குதாரராக இருப்பவர்கள் பெருந்த்தோட்ட தொழிலாளர்கள். இவர்களின் உழைப்பிற்க்கு ஏற்ற ஊதியம் பெற பல போராட்டங்களை முன்னெடுத்தனர்.
தற்போது இவர்களின் நாளாந்த ஊதியமாக ரூபாய் 1700 வழங்கப்படும் என கூறிய போதிலும், இது வெறும் வாய் வார்த்தையாகவே காணப்படுகின்றது.
இந்நிலையில் தலவாக்கலை நானுஓயா தோட்ட மக்கள் தங்களுக்கு 1700 ரூபாயை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஊதியத்தை வழங்க மறுக்கும் தோட்ட நிறுவங்கள் வெளியேற வேண்டும் எனவும் தேயிலை தோட்டங்களை அரசாங்கத்திடம் வழங்க வேண்டும் எனவும் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
மேலும் இவ்வாறு ஊதியத்திற்க்காக போராடும் மக்களை தோட்ட நிறுவனங்கள் அச்சுறுத்தவதாகவும் தெரிய வந்துள்ளது.