பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வெளியான போய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிட்க்குள் அறிமுகமானவர் தான் நடிகர் சித்தார்த்.
நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் சித்தார்த் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர் என்றே கூறலாம்.
அண்மையில் வெளியான சித்தா திரைப்படத்தின் மூலம் நடித்தது மட்டுமின்றி இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சித்தார்த்தின் 40 வது திரைப்படமான “மிஸ் யூ” திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்குகின்றார். இவர் எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சர் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்க்கான படப்பிடிப்பானது பூஜையுடன் இனிதே ஆரம்பமானது.





