கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் நேற்றைய தினம் 01.08.2024 இரவு 1.00 மணியளவில் மக்கள் குடியிருப்புகள் பகுதியில் புகுந்த காட்டு யானை ஒன்று இவ்வாறு அழிந்துள்ளது.
வாழ்வாதாரத்திற்காக செய்கை மேற்கொள்ளப்பட்ட இருபதுக்கு மேற்பட்ட வாழைகள், 1/4 ஏக்கரில் செய்கை மேற்கொள்ளப்பட்ட சோழன், பலாக் காய்கள், தென்னை உள்ளிட்டவை யானையால் முற்று முழுதாக சேதமாக்கி உள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேலும் தெரிவிக்கையில் இன்றைய தினமும் தமது பகுதிக்கு யானை வரலாம் என அச்சத்தில் இருப்பதாகவும் தமது பாதுகாப்பிற்காக யானை வெடியை தந்துதவுமாறு வேண்டியுள்ளார்.