EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Mannar மன்னார் வைத்தியசாலையில் இளம் பட்டதாரி குடும்ப பெண் மரணம்.

Mannar மன்னார் வைத்தியசாலையில் இளம் பட்டதாரி குடும்ப பெண் மரணம்.

ஆவணி 4, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி இளம் பட்டதாரி குடும்ப பெண் திருமதி மரியராஜ் சிந்துஜா (வயது-27 ) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்திற்கு அன்றைய தினம் விடுதிக்கு பொறுப்பாக இருந்த வைத்தியரின் பொறுப்பற்ற செயற்பாட்டால் குறித்த பட்டதாரியை கொலை செய்து விட்டனர்.

அவர்கள் இந்தப் பெண்ணின் மரணத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்றைய தினம் (4) சுகாதார அமைச்சின் (மத்தி) செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடித்த மேலும் குறிப்பிடுகையில்,

திருமதி மரியராஜ் சிந்துஜா வயது 27 என்பவர் கடந்த மாதம் ஒன்பதாம் திகதி மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளார். 11 ஆம் திகதி தாயும் சேயும் நலமாக வீடு சென்றுள்ளனர்.

ஏழு நாட்களின் பின்னர் தையல் வெட்டுவதற்காக 16 அன்று முருங்கன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். பின்னர் 27 இரவு குருதி பெருக்கு காரணமாக அன்று இரவு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சேர்ந்துள்ளார்.

மறுநாள் 28 காலை 7 மணி வரை எந்த வைத்தியர்களும் பார்வையிடவில்லை. விடுதிக்கு பொறுப்பான வைத்தியர்கள் தங்கும் விடுதியில் இருந்துள்ளனர். தாதிய உத்தியோகத்தர் வைத்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டும் கூட அவர்கள் வரவில்லை.

ஆகவே வைத்தியர்களின் பொறுப்பற்ற செயற்பாட்டால் அவர் மரணம் அடைந்துள்ளார். அரச வைத்தியசாலைகளில் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் நடைபெறுவது வேடிக்கையாகிவிட்டது. அதுவும் இரவு நேரங்களில் இந்த நிலை தொடர்கின்றது.

உயிருடன் விளையாடும் அசட்டையீனங்கள் தொடர்கின்றது. மருத்துவ தவறு எனும் சட்ட பாதுகாப்பு கவசத்தினால் தினந்தோறும் நாடு முழுவதும் பலர் இறந்து விடுகின்றனர்.

இந்த விடுதிக்கு பொறுப்பாக இருந்த வைத்தியரின் பொறுப்பற்ற செயற்பாட்டால் ஒரு பட்டதாரி குடும்ப பெண்ணை கொலை செய்து விட்டனர். அவர்கள் இந்தப் பெண்ணின் மரணத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் பொறுப்பேற்றல், பொறுப்பு கூறுதல் பகிர்ந்து கொள்ளுதல் இம் மூன்றும் வைத்திய துறையின் அணிகலன்களாக இருக்க வேண்டும்.

உயிரோடு உறவாடும் உன்னத பணியை செய்பவர்கள் இப்படி பொறுப்பற்று நடந்து கொள்ளலாமா? இந்த வைத்தியசாலையில் இவ்விதமான மரணங்கள் ஏராளம் நிகழ்ந்துள்ளன. அவரின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை நீதியாக வெளிவருமா என்னும் சந்தேகம் எழுகிறது.

எனவே இச் சம்பவத்தினை திட்டமிட்ட குற்ற மனம் உள்ள கொலையாக கருதுகிறோம். பொறுப்பற்ற உத்தியோகத்தர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது தான் ஏனைய நோயாளர்களாவது பாதிக்கப்படுவதில் இருந்து தவிர்த்துக் கொள்ள முடியும். இறந்தவரை மீட்டு விட முடியாது. தண்டனை ஒரு பொருட்டல்ல. ஆனால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி இவ் விதமானவர்களை இந்த மருத்துவ துறையில் இருந்து அகற்ற வேண்டும்.

குற்றவாளியை குற்றவாளியே விசாரிக்க முடியாது.

இதை விசாரணை செய்வதற்கு வைத்தியத்துறை கடந்து சட்டத்துறை சார்ந்தவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.’ இந்த விசாரணையை மூடி மறைக்காமல் நீதி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய செய்திகள்

சீரற்ற வானிலையால் 16 மாவட்டங்களுக்கு  பாதிப்பு
இலங்கை

சீரற்ற வானிலையால் 16 மாவட்டங்களுக்கு பாதிப்பு

புரட்டாதி 20, 2026
மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு
அண்மைய செய்திகள்

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

புரட்டாதி 20, 2026
யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்
அண்மைய செய்திகள்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

புரட்டாதி 20, 2026
கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்
அண்மைய செய்திகள்

கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

புரட்டாதி 20, 2026
யாழில் திடீர் மின்சார விநியோக தடை
அண்மைய செய்திகள்

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

புரட்டாதி 20, 2026
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
அண்மைய செய்திகள்

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

புரட்டாதி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

11 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் திடீர் மின்சார விநியோக தடை

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

11 மணத்தியாலங்கள் முன்னர்
நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

6 நாட்கள் முன்னர்
எரிபொருள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

எரிபொருள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

7 நாட்கள் முன்னர்
வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In