EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Jaffna தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்ற மக்கள் எதிர்ப்பு.

Exif_JPEG_420

Jaffna தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்ற மக்கள் எதிர்ப்பு.

ஆவணி 5, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன் மருதங்கேணி கிராம மக்கள் இன்று காலை 9:30மணிமுதல் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள மருதங்கேணி கிராம சேவகர் பிரிவு உள்ளது. இக் கிராம சேவகர் பிரிவில் மருதங்கேணி வடக்கு, மருதங்கேணி தெற்கு, தாளையடி என்கின்ற மூன்று கிராமங்கள் உள்ளன.

இதில் தாளையடி என்கின்ற சுமார் 140 குடும்பங்களைக் கொண்ட கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதற்க்குரிய நடவடிக்கைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி இரகசியமாக மேற்கொண்டு வருகின்றார். இதனை அறிந்த மருதங்கேணி வடக்கு, மருதங்கேணி தெற்கு கிராம மக்கள் தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதை உடனடியாக கைவிடுமாறு கோரியே குறித்த போராட்டம் நடாத்தப்பட்டது.

இதில் மருதங்கேணி எங்கள் சொத்து இதனை ஒருநாளும
பிரிக்க இடமளிக்க மாட்டோம், தாளையடியில் கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டத்திற்கதகாக எமது பாரம்பரிய நிலங்களை அபகரிக்காதே, உங்கள் டீலுக்காக தாளையடி கிராமத்தை பிரிக்காதே, மருதங்கேணி எங்கள் பூர்வீக சொத்து, உங்கள் நலனுக்கு எங்கள் பிரதேசம் லஞ்சமா, எல்லை நிர்ணயம் செய்தபோது அயல் கிராமங்களை அழைக்காதது ஏன், இவ்வாறு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பிரதேச செயலருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அங்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலர் தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக ஆக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தாளையடி கிராமம் தனியான கிராம சேவகர் பிரிவாக ஆக்கப்படும்போது எல்லைகள் நிர்ணயம் செய்யும் போது தங்களையும் அழைத்துத்தான் எல்லை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

அவ்வாறு கருத்து தெரிவிக்கும் போது குறுக்கிட்ட போராட்டக்காரர்கள் நீங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறீர்கள், அப்படியாயின் எவ்வாறு இந்த கடிதம் அனுப்பப்பட்டது என்று பிரதேச செயலர் கு.பிரபாக மூர்த்தியால் மாவட்ட செயலருக்கு முகவரியிடப்பட்ட, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கு பிரதியிடப்பட்ட கடிதம் ஒன்றினை வாசித்து காட்டினர். அதில் நாற்றிசையும் எல்லை இடப்பட்டு தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதற்க்குரிய நடவடிக்கை எடுங்கள் என எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதேச செயலர் பதில் எதுவும் கூற முடியாது அங்கிருந்து விலகிச் சென்றார்.

இதேவேளை அங்கு போராட்டக்காரர்கள் தாளையடி கிராமத்தை அவர்கள் இருக்கின்ற அமைவிடத்துடன் கிராம சேவகர் பிரிவாக மாற்ற தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும், பிரிதேச செயலரால் மாவட்ட செயலருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் அதில் உள்ள எல்லைகளுடன் தாளையடி கிராம சேவகர் பிரிவை உருவாக்கவும், தமது பாரம்பரியமான கிராமத்தை இல்லாதொழிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In